WhatsApp Scam : வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பறிபோன ரூ.1.94 கோடி.. அதிர்ச்சி சம்பவம்!

Digital Arrest | மும்பையை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், தனக்கு வாட்ஸ்அப்பில் வந்த வீடியோ கால் மூலம் தனது நிலையான வைப்பு நிதி கணக்கில் இருந்த சுமார் ரூ.1.94 கோடி பணத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Scam : வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் பறிபோன ரூ.1.94 கோடி.. அதிர்ச்சி சம்பவம்!

மாதிரி புகைப்படம்

Published: 

14 Dec 2024 14:36 PM

உலக அளவில் தொழில்நுட்ப வசதிகள் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யபப்டும் மோசடி மற்றும் குற்ற சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. அந்த வகையில், மும்பையை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவர், தனக்கு வாட்ஸ்அப்பில் வந்த வீடியோ கால் மூலம் தனது நிலையான வைப்பு நிதி கணக்கில் இருந்த சுமார் ரூ.1.94 கோடி பணத்தை இழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சைபர் குற்றங்கள் காரணமாக பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை இழந்த பல சம்பவங்கள் உள்ளன. ஆனால், முதியவர் தனது நிலையான வைப்பு நிதி கணக்கில் இருந்த பணத்தை இழந்துள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது, இத்தகைய மோசடி மற்றும் குற்ற சம்பவங்களில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Jio : பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஜியோவின் 3 சிறந்த ரீச்சார்ஜ் திட்டங்கள்.. சிறப்பு பலன்கள் என்ன?

FD கணக்கில் இருந்து ரூ.1.94 கோடி பணத்தை இழந்த முதியவர்

பொதுவாக முதுமை காலத்தில் நிதி பற்றாக்குறை அற்ற நிலைமை இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு பலரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அவ்வாறு, நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்த நபர் ஒருவர் மொத்த பணத்தை மோசடி கும்பலிடம் பறிகொடுத்துள்ளார். மும்பையை சேர்ந்த 68 வயது முதியவர் ஒருவருக்கு தனது வாட்ஸ்அப் நம்பருக்கு தெரியாத எண்ணில் இருந்து வீடியோ கால் வந்துள்ளது. முதியவரை வீடியோ கால் மூலம் தொடர்புக்கொண்டு பேசிய நபர், தான் மும்பை குற்ற பிரிவில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அந்த நபரின் பின் பக்கத்தில் காவல் நிலையத்தில் இருப்பதை போல சுவரும் இருந்துள்ளது. அப்போது அந்த நபர், முதியவரை பண மோசடி வழ்க்கில் ஈடுபடுத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். வீடியோ காலில் தொடர்புக்கொண்டு பேசிய நபரின் குரல், உடை, சுவர் என அனைத்தும் அவரை உண்மையான போலீஸ் அதிகாரியை போல தோற்றம் அளிக்க செய்ய பொய் குற்றச்சாட்டுக்கு பயந்து முதியவர் மோசடி வலையில் வீழ்ந்துள்ளார்.

இதையும் படிங்க : Cyber Crime : இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ரூ.6.37 கோடி பணத்தை இழந்த இளம் பெண்.. அதிர்ச்சி சம்பவம்!

விசாரணையின் பெயரில் நாடகமாடிய கும்பல்

இதற்கிடையே டிஜிட்டல் விசாரணை நடந்த வேண்டும் என்று, வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்று முதியவரை அந்த கும்பல் மிரட்டியுள்ளது. அதன்படி, 7 நாட்களாக விசாரணை என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக முதியவரிடம் இருந்து அவரது, வங்கி விவரங்களை பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி, சுமார் ரூ.1.94 கோடி பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வங்கி கணக்கிற்கு முதிவரை அந்த கும்பல் பரிவர்த்தனை செய்ய வைத்துள்ளது. மேலும், முதியவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகவும், அது குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : மே 5-க்குள் இத பண்ணிடுங்க.. இல்லனா வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாம போகலாம்.. முக்கிய அறிவிப்பு!

மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • குற்றப்பிரிவு போலிசார் ஒருபோதும் ஆன்லைனில் விசாரணை மேற்கொள்ள மாட்டனர். அதுமட்டுமன்றி, காவல்துறையினர் எந்த வித பண பரிவர்த்தனையையும் கேட்க மாட்டனர். எனவே உங்களுக்கு அத்தகைய மிரட்டல்கள் வந்தால் அவற்றை கண்டு பயப்பட வேண்டாம்.
  • சமீப காலமாக “Digital Arrest” என்ற வார்த்தையை மோசடிக்காரர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். டிஜிட்டல் கைது என்பது இந்திய சட்டத்தில் இல்லை. எனவே, யாரேனும் உங்களை டிஜிட்டல் கைது என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அது சைபர் மோசடி என்பதை உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
  • குறிப்பாக வங்கி கணக்கு விவரங்கள், ஓடிபி உள்ளிட்ட எந்தவித முக்கிய தகவல்களையும் பகிராதீர்கள்.
  • அவ்வாறு நீங்கள் ஏதேனும் மோசடியில் சிக்கியுள்ளீர்கள் என்று நினைத்தால் அது குறித்து உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பது எல்ல வித பிரச்னைகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவும்.

மேற்குறிப்பிட்ட இந்த விஷயங்களை பின்பற்றி டிஜிட்டல் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.

ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும் - உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் சில முக்கிய பழக்கங்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட சிறந்த இடங்கள்!
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தர வேண்டிய அறிவுரைகள்!