Online Scam : ஆன்லைன் மோசடி செய்ய முயன்ற நபரை ஷாக் ஆக செய்த இளைஞர்.. எப்படி தெரியுமா?
Digital Arrest | ஆன்லைன் மோசடி சம்பவங்கள் ஒரு பெரிய அபாயமாக மாறி வரும் நிலையில், பொதுமக்கள் தாங்கள் ஏதேனும் மோசடியில் சிக்கொக்கொண்டால் பயத்தில் பண பரிமாற்றம் செய்வது, முக்கிய விவரங்களை வழங்குவது என தவறு செய்துவிடுகின்றனர். ஆனால், இளைஞர் ஒருவர் இந்த சூழலை மிக சிறப்பாக கையாண்டுள்ளார்.
இந்தியாவில் ஆன்லைன் மோசடிகள் மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருவது தொடர் கதையாகி வருகிறது. ஆன்லைன் மோசடியில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு தரப்பில் இருந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், ஆன்லைன் மோசடிகள் மற்றும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. அந்த வகையில், ஆன்லைனில் வீடியோ கால் மூலம் மோசடி செய்ய முயன்ற நபரை இளைஞர் ஒருவர் வித்தியாசமான முறையில் கையாண்டு ஷாக் ஆக செய்துள்ளார். இந்த சுவாரஸ்ய சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த மோசடி சம்பவம் குறித்த கூடுதல் தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Cyber Crime : இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ரூ.6.37 கோடி பணத்தை இழந்த இளம் பெண்.. அதிர்ச்சி சம்பவம்!
இளைஞரிடம் மோசடியில் ஈடுபட முயன்ற நபர்
மத்திய பிரதேச மாநிலம், போபால் பகுதியை சேர்ந்தவர் அனிரூத். இவர், போப்பாலில் கிராஃபிக் டிசைனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி அவருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் தொடர்ப்புக்கொண்டு பேசிய நபர், தான் ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அதிகாரி என்று கூறியுள்ளார். அப்போது பேசிய அந்த நபர், இளைஞரிடம் அவரது மொபைல் எண்ணை பயன்படுத்தி மிரட்டல் உள்ளிட்ட பல குற்ற சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை மேற்கொள்ள மும்பை குற்றப்பிரிவில் இருந்து அதிகாரிகள் தொடர்புக்கொள்வார்கள் என்றும் அந்த நபர் இளைஞரை மிரட்டியுள்ளார். ஆனால், தன்னை தொடர்புக்கொண்டு பேசிய நபர் உண்மையான அதிகாரி இல்லை என்பதை உணர்ந்துக்கொண்ட அந்த இளைஞர், அவர்களின் மிரட்டலுக்கு பயப்படாமல் இருந்துள்ளார்.
இதையும் படிங்க : Gmail : ஜிமெயிலின் “Safe Listing” என்றால் என்ன.. அதை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வீடியோ காலில் தொடர்புக்கொண்டு பேசிய டம்மி போலீஸ்
இளைஞரை போன் கால் மூலம் மிரட்டிய நிலையில், உடனடியாக அவரது மொபைல் எண்ணுக்கு வீடியோ கால் வந்துள்ளது. அதில் ஒரு நபர் காவலர்களை போல சீருடை அணிந்துக்கொண்டு, தன்னை மும்பை குற்றப்பிரிவு போலீசார் என்று அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், இளைஞரை தனது மொபைல் எண் மற்றும் புகார் தொடர்பான எண்ணை பகிர கோறியுள்ளார். பிறகு, ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் எதுவும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை சோதிக்க வேண்டும் என கூறி, ஆதார் அட்டை விவரங்களை கேட்டுள்ளார். இந்த நிலையில், இது போலியான விசாரணை என்பதை தான் கண்டுபிடித்துவிட்டதை மோசடி செய்ய முயற்சிக்கும் நபருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைத்துள்ளார்.
இதையும் படிங்க : WhatsApp : மே 5-க்குள் இத பண்ணிடுங்க.. இல்லனா வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாம போகலாம்.. முக்கிய அறிவிப்பு!
ஒரே கேள்வியில் ஷாக் ஆன மோசடிக்காரர்
அப்போது அந்த இளைஞர், இதை எப்படி ஏற்பாடு செய்தீர்கள், இதற்கு கடின உழைப்பு தேவைப்படும் அல்லவா என கேட்டுள்ளார். அதற்கு மோசடி செய்ய முயற்சித்த நபர், இதற்கு கடின உழைப்பு தேவைப்படும். உங்களுக்கு உதவுவதற்காக தான் நாங்கள் உள்ளோம் என்று பதில் அளித்துள்ளார். இளைஞர் மோசடிக்கு இசைவு தரவில்லை என்பதை உணர்ந்த மோசடிக்காரர், உடனடியாக வீடியோ காலை துண்டித்துள்ளார். பிறகு வாட்ஸ்அப் மெசேஜில் அந்த நபர், நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்று இளைஞரிடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த இளைஞர் எமோஜியுடன் பதில் அளித்துள்ளார்.