YouTube Scam : ஆசைக்காட்டி மோசம் செய்த கும்பல்.. யூடியூப் மோசடியில் சிக்கி ரூ.56.7 லட்சத்தை இழந்த நபர்!

Cyber Crime | மங்களூருவின் புத்தூர் பகுதியில் 57 வயதுடைய நபர் ஒருவர் புத்தக கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மொபைல் எண்ணுக்கு கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், சிறிய வேலைகளை செய்வதன் மூலம் ஆன்லைனில் எப்படி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று வழிநடத்துவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

YouTube Scam : ஆசைக்காட்டி மோசம் செய்த கும்பல்.. யூடியூப் மோசடியில் சிக்கி ரூ.56.7 லட்சத்தை இழந்த நபர்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

24 Oct 2024 18:36 PM

தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்தை போலவே ஆன்லைன் மோசடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்த நிலையில், மங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் யூடியூப் மோசடியில் சிக்கி ரூ.56.7 லட்சம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன, அந்த நபர் பணத்தை இழந்தது எப்படி, இத்தகைய ஆன்லைன் மோசடி சம்பவங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Budget Smartphones : ரூ.10,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்.. தீபாவளி சேலில் அதிரடி சலுகை!

யூடியூப் மோசடியில் சிக்கிய 57 வயது நபர்

மங்களூருவின் புத்தூர் பகுதியில் 57 வயதுடைய நபர் ஒருவர் புத்தக கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது மொபைல் எண்ணுக்கு கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், சிறிய வேலைகளை செய்வதன் மூலம் ஆன்லைனில் எப்படி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று வழிநடத்துவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது யூடியூப் வீடியோக்களை லைக் செய்து அந்த ஆதாரத்தை அந்த நபருக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குறுஞ்செய்தியை கண்டு உற்சாகமடைந்த அந்த நபர், யூடியூப் வீடியோவை லைக் செய்து அந்த ஸ்கிரீன் ஷாட்டை அந்த நபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படிங்க : Amazon Prime : இனி திரைப்படங்களுக்கு நடுவே விளம்பரம் தோன்றும்.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்!

ஆசைக்காட்டி மோசம் செய்த கும்பல்

இந்த வேலையின் தொடக்கத்தில் அந்த நபருக்கு பணம் வந்துள்ளது. ஒரு டாஸ்க் முடித்தால் ரூ.123, இரண்டு டாஸ்க் முடித்தால் ரூ.492 என பணம் அனுப்பப்பட்டுள்ளது. சுலபமாக பணம் சம்பாதிக்கும் ஆசையில் அந்த நபரும், இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சில வேலைகளை செய்து முடித்தவுடன், மோசடிக்காரர் அந்த நபரை டெலிகிராம் குழுவில் இணைத்துள்ளார். அப்போது நிறைய பணம் வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று அந்த மோசடி கும்பல் கூறியுள்ளது. அதுவரை அந்த நபருக்கு ரூ.52,000 வரை பணம் வந்துக்கொண்டிருந்துள்ளது.

இதையும் படிங்க : Zomato : தீபாவளியை முன்னிட்டு பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ.. எவ்வளவு தெரியுமா?

மோசடிக்காரர்களின் பேச்சை நம்பிய அந்த நபர் பணத்தை செலுத்தி வந்துள்ளார். பிறகு சில நாட்கள் கழித்து அந்த மோசடி கும்பல் அந்த நபருக்கு பணம் அனுப்புவதை நிறுத்திக்கொண்டுள்ளது. இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துக்கொண்ட அந்த நபர், மோசடிக்காரர்களை தொடர்புக்கொண்டுள்ளார். ஆனால் அந்த கும்பலிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : Moto : பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் உண்மையானதா என்பதை ஒரு முறைக்கு இரண்டு முறை சோதனை செய்யுங்கள்.
  • குறிப்பாக பணம் மற்றும் வங்கி சார்ந்த குறுஞ்செய்திகள் எதுவாக இருந்தாலும் கவனமாக கையாளுங்கள்.
  • உங்கள் வங்கி விவரம், கடவுச்சொல், வங்கி கணக்கு எண், ஏடிஎம் பின் உள்ளிட்டவற்றை யாரிடமும் பகிராதீர்கள்.
  • சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் இலவசம் சார்ந்த செய்திகளை, குறுஞ்செய்திகளை மிகவும் கவனத்துடன் கையாளுவது நல்லது.
  • தனிநபரின் வங்கி கணக்கிற்கோ அல்லது அடையாளம் தெரியாத நபருக்கோ பணம் செலுத்துவதை தவிர்த்துவிடுங்கள்.
  • ஒருவேளை நீங்கள் ஆன்லைன் மோசடிக்கு இரையாகியுள்ளீர்கள் என நினைத்தால் உடனடியாக அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்.

இதையும் படிங்க : iPhone 15 : ஐபோன் 15-க்கு ரூ.14,000 தள்ளுபடி.. தீபாவளி சேலில் பிளிப்கார்ட் அசத்தல் சலுகை!

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

... இதுதான் அதுக்கு காரணம் - ஐஸ்வர்ய லட்சுமி
இணையத்தை கலக்கும் நடிகை மாளவிகா நியூ ஆல்பம்
சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம்‌‌ பழம் சாப்பிடலாமா?
மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்யலாம்?