5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Whatsapp Update : வாட்ஸ்அப்பில் இனி இது ஈசி.. டபுள் டேப் செய்தால் மட்டும் போதும்!

New Feature | மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் டபுள் டேப் ரியாக்‌ஷன் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் சேட்டில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு பயனர்கள் ஒவ்வொரு குறுஞ்செய்தியையும் அழுத்தி ரியாக்ட் செய்து வந்த நிலையில் தற்போது அது சுலபமாக்கப்பட்டுள்ளது. அதன்படி குறுஞ்செய்திகளை டபுள் டேப் செய்வதன் மூலம் சுலபமாக ரியாக்ட் செய்யலாம். 

Whatsapp Update : வாட்ஸ்அப்பில் இனி இது ஈசி.. டபுள் டேப் செய்தால் மட்டும் போதும்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 31 Jul 2024 17:49 PM

வாட்ஸ்அப் புதிய அம்சம் : மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்பை உலகில் உள்ள பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் கடிதங்கள் மூமும் தொலைபேசி மூலம் பேசிக்கொண்டிருந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் எங்கிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒருவரை ஒருவர் தொடர்புக்கொள்ள முடியும். அந்த அளவிற்கு தொழில்நுபம் வளர்ந்துள்ளது. இதன் காரணமாக சமூக ஊடக செயலிகளின் பயன்பாடும் மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அவ்வாறு அனைவரும் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வாட்ஸ்அப்பில் ஆடியோ கால், வீடியோ கால், புகைப்படங்கள் அனுப்புவது, குறுஞ்செய்தி அனுப்புவது என அனைத்தும் மிக சுலபமாக செய்து முடித்துவிடலாம். அதுமட்டுமன்றி தனது பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் அவ்வப்போது பல புதிய அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வாட்ஸ்அப் தனது பயனர்களுக்காக புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

டபுள் டேப் அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ள வாட்ஸ்அப்

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் டபுள் டேப் ரியாக்‌ஷன் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக வாட்ஸ்அப் சேட்டில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு பயனர்கள் ஒவ்வொரு குறுஞ்செய்தியையும் அழுத்தி ரியாக்ட் செய்து வந்த நிலையில் தற்போது அது சுலபமாக்கப்பட்டுள்ளது. அதன்படி குறுஞ்செய்திகளை டபுள் டேப் செய்வதன் மூலம் சுலபமாக ரியாக்ட் செய்யலாம்.

இதையும் படிங்க : Meta AI : வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ.. வீட்டுப்பாடம் முதல் ஆராய்ச்சி வரை.. மாணவர்களுக்கான சூப்பர் பலன்கள்!

வாட்ஸ்அப்பின் டபுள் டேப் டீஃபால்ட் ஹார்ட் ரியாக்சன்

வாட்ஸ்அப்பின் இந்த டபுள் டேக் ரியாக்‌ஷனை நீங்கள் பயன்படுத்தும் போது, வாட்ஸ்அப் தானாகவே ஹார்ட் எமோஜியை காட்டும். அதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேலை உங்களுக்கு ஹார்ட் எமோஜியை விட வேறு ஏதேனும் எமோஜி வேண்டும் என்றால் பழைய முறையை பினபற்றி மாற்றிக்கொள்ளலாம். அதாவது குறுஞ்செய்தியை சிறிது நேரம் அழுத்தி அதற்கு பிறகு ரியாக்ட் செய்வது.

இதையும் படிங்க : Price Decreased : ஐபோன் 14 முதல் 15 ப்ரோ மேக்ஸ் வரை.. அதிரடியாக விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்.. முழு விவரம் இதோ!

வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் எப்போது அறிமுகம் செய்யப்படும்

வாட்ஸ்அப்பின் இந்த டபுள் டேப் அம்சம் நேரடியாக ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஆனால் இந்த புதிய அம்சம்  எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று வாட்ஸ்அப் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் டபுள் டேப் அம்சங்கள் உள்ள நிலையில், தற்போது அந்த அம்சம் வாட்ஸ்அப்பிலும் அறிமுகப்படுத்தப் பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News