5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Meta : கோடிகளில் சம்பளம்.. சாப்பாடு டோக்கனில் ஏமாற்று வேலை.. பணி நீக்கம் செய்த மெட்டா!

Employees | உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப். இந்த இரண்டு செயலிகளின் தாய் நிறுவனமாக மெட்டா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவது கோடி கணக்கான பயனர்களை கொண்டுள்ள மெட்டா, பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டுள்ளது.

Meta : கோடிகளில் சம்பளம்.. சாப்பாடு டோக்கனில் ஏமாற்று வேலை.. பணி நீக்கம் செய்த மெட்டா!
கோப்பு புகைப்படம் (Picture Credit : Unsplash)
vinalin
Vinalin Sweety | Updated On: 18 Oct 2024 14:08 PM

சலுகைகளை தவறாக பயன்படுத்தியதாக வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக மெட்டா, தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இது வழக்கமாக ஐடி துறைகளில் செய்யப்படும் பணி நீக்கம் போல் இல்லாமல், முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. விதிகளை மீறியதற்காக மெட்டா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், மெட்டா நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ததற்கு காரணம் என்ன, ஊழியர்கள் செய்தது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Apple iPhone 13 : ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்!

24 ஊழியர்களை பணி நீக்கம் செய்த மெட்டா

உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப். இந்த இரண்டு செயலிகளின் தாய் நிறுவனமாக மெட்டா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகம் முழுவது கோடி கணக்கான பயனர்களை கொண்டுள்ள மெட்டா, பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் அலுவலகத்தில் பணிபுரிந்த 24 ஊழியர்களை மெட்டா அதிரடியாக பணி நீக்கம் செய்து அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், மெட்டாவின் இந்த பணி நீக்க நடவடிக்கை வழக்கமாக ஐடி துறைகளில் செய்யப்படும் பணி நீக்கம் இல்லை. விதிகளை மீறியதற்காக தங்களது ஊழியர்களுக்கு இத்தகைய தண்டனையை மெட்டா வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : Moto G85 : மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி.. பிளிப்கார்டின் அசத்தல் சலுகை!

நிறுவனத்தின் விதிகளை மீறி ஊழியர்கள்

மெட்டா நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு, பணியின்போது உணவு அருந்திக்கொள்ளும் வகையில், மெட்டா உணவுக்கான வவுச்சர்களை வழங்கி வருகிறது. மொத்தம் 25 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான அந்த வவுச்சரை பயன்படுத்தி ஊழியர்கள் தங்கள் பணியின்போது உணவு அருந்திக்கொள்ளலாம். ஆனால் மெட்டா ஊழியர்கள் சிலர், அந்த வவுச்சரை பயன்படுத்தி, பேஸ்ட், சோப்பு உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வாங்கியுள்ளனர். இதனால் நிறுவனத்தின் சேவைகளை தவறாக பயன்படுத்துவதாகவும், விதிகளை மீறியதாகவும் தங்களது 24 ஊழியர்கள் மீது மெட்டா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படிங்க : Instagram : “Profile Card” அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த மெட்டா

ஊழியர்களின் இந்த விதிமீறல் செயல் குறித்து மெட்டா தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. அப்போது பல ஊழியர்கள் மெட்டாவின் இந்த உணவு சேவையை தவறாக பயன்படுத்தியதும், வீட்டு உபயோக பொருட்களை வாங்கியதும் தெரியவந்துள்ளது. மேலும் சில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வராமலே மெட்டாவின் சேவையை பயன்படுத்தி உணவு வாங்கியதும் மெட்டாவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த மெட்டா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதையும் படிங்க : Jio Bharat V3 & V4 : ஜியோ பாரத் வி3 மற்றும் வி4.. வெறும் ரூ.1099-க்கு மொபைல் போன்களை அறிமுகம் செய்த ஜியோ!

குற்றங்களை இரண்டாக பிரித்து தண்டனை வழங்கிய மெட்டா

விதிகள மீறி சேவைகளை தவறாக பயன்படுத்திய ஊழியர்களை இரண்டாக பிரித்து மெட்டா தண்டனை வழங்கியுள்ளது. அதாவது ஒருமுறை தெரியாமல் குற்றம் செய்தவர்கள் மற்றும் நீண்ட நாட்களாக குற்றத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என இரண்டு வகையாக பிரித்துள்ளது. அதில், ஒருமுறை மற்றும் சிறிய தவறுகளை செய்த ஊழியர்களை மன்னித்து அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்க மெட்டா முன்வந்துள்ளது. அதே நேரத்தில், பல காலமாக சேவைகளை தவறாக பயன்படுத்திய ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Social Media Account : ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது சமூக வலைதள கணக்குகள் என்ன ஆகும் தெரியுமா?

மெட்டாவின் இந்த அதிரடி நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News