5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Whatsapp AI : இனி வாட்ஸ்அப்பிலும் AI.. மெட்டாவின் அதிரடி அறிவிப்பு.. சிறப்பு அம்சங்கள் என்ன?

Meta | மெட்டா நிறுவனம் செயற்கை நுன்னறிவு தொழில்நுட்பத்தை வாட்ஸப்பில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் குழு உரையாடல்களில் சிறந்த உணவகங்களுக்கான ஆலோசனை, சாலை பயணங்களுக்கான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மெட்டா ஏஐ வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp AI : இனி வாட்ஸ்அப்பிலும் AI.. மெட்டாவின் அதிரடி அறிவிப்பு.. சிறப்பு அம்சங்கள் என்ன?
மாதிரி புகைப்படம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 02 Jul 2024 19:09 PM

மெட்டா புதிய அறிவிப்பு : மெட்டா நிறுவனம் தனது பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் சமீபத்தில் தனது செயற்கை நுண்ணறிவு வசதி குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மெட்டாவின் நுண்ணறிவு வசதி அதன் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், வாட்ஸ் அப்பிலும் அதை அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா. ஏற்கனவே சில பயனாளர்களுக்கு வாட்ஸ் அப்பில் மெட்டா ஏஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து வாட்ஸ் அப் பயனாளர்களும் மெட்டாவின் இந்த ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்.

மெட்டா ஏஐ என்றால் என்ன?

மெட்டா ஏஐ, உரையாடல்கள் மற்றும் மெட்டா செயலிகளின் சிறந்த செயல்பாட்டை பெற உதவுகிறது. மெட்டா ஏஐ வசதியை பெற விரும்பும் பயனர்கள் வாட்ஸ்அப்பில் இருந்து வெளியே செல்லாமல் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். வாட்ஸ் அப் குழு உரையாடல்களில் சிறந்த உணவகங்களுக்கான ஆலோசனை, சாலை பயணங்களுக்கான ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை மெட்டா ஏஐ வழங்கும்.

மெட்டா ஏஐ சேவையை வாட்ஸ் அப்பில் பயன்படுத்துவது எப்படி?

பயனர்கள் வாட்ஸ் அப் சர்ச் மூலம் மெட்டா ஏஐ வசதியை பயன்படுத்தி கேள்விகள் கேட்களாம். அவ்வாறு பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மெட்டாவின் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பதிலளிக்கப்படும். செய்திகள், புகைப்படங்கள், இணைப்புகள், GIF-கள், ஆடியோ, வாக்கெடுப்புகள் மற்றும் ஆவணங்களை கண்டறிய பயனர்கள் வாட்ஸப்பில் தேடல் செயல்பாட்டை வழக்கம்போல தொடர்ந்து பயன்படுத்தலாம்.

மெட்டா ஏஐ மூலம் தேட

  • உங்கள் குழுக்களின் மேல உள்ள தேடல் சின்னத்தை கிளிக் செய்யவும்.
  • உங்கள் கட்டளையை தட்டச்சு செய்யவும் அல்லது பரிந்துறைக்கப்பட்ட ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
  • நீங்கள் தட்டச்சு செய்யும் போது மெட்டா ஏஐ ஐக் கேளுங்கள் என்பதன் கீழ் தேடல் பரிந்துரைகள் தோன்றும்.
  • விதிமுறைகளை படித்துவிட்டு தேடல் பரிந்துரையை கிளிக் செய்யவும்.

இதையும் படிங்க : Jio New 5G Plans: அதிரடியாக உயர்ந்த ஜியோ ரீசார்ஜ் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா? வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

வாட்ஸ்அப் உரையாடல்களில் மெட்டா ஏஐ எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? 

வாட்ஸ்அப் குழு உரையாடல்களில் பயனர்கள் கேள்விகளை கேட்கலாம் அல்லது மெட்டா ஏஐ-ன் ஆலோசனைகளை பெறலாம். குழுவில் உள்ள அனைவரும் மெட்டா ஏஐ-க்கு அனுப்பப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள் இரண்டையும் பார்க்கலாம். பயனர்கள் அனுப்பும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த பதில்கள் மெட்டாவிலிருந்து ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படுகின்றன. மெட்டா ஏஐ தொழில்நுட்பத்தால் குறிப்பிட்ட கேள்விகளை மட்டுமே படித்து பதிலளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.