5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Whatsapp : வாட்ஸ் அப் கொண்டு வந்த சூப்பர் அப்டேட்.. என்னனு பாருங்க!

Favourites Filter | வாட்ஸ்அப்பின் ஃபேவரைட்ஸ் ஃபில்டர் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நபர்கள் மற்றும் குழுக்களை ஒரு பட்டியலாக உருவாக்க உதவும் புதிய அம்சம் ஆகும். இந்த பட்டியலை உங்கள் உரையாடல்களின் வரிசையில் முன் வைத்திருக்க இந்த புதிய அப்டேட் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் குரூப்கள் என அனைத்தையும் இந்த புதிய அம்சத்தின் மூலம் வரிசை படுத்திக் கொள்ளலாம்.

Whatsapp : வாட்ஸ் அப் கொண்டு வந்த சூப்பர் அப்டேட்.. என்னனு பாருங்க!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 18 Jul 2024 21:28 PM

வாட்ஸ்அப் செயலி : 50 ஆண்டுகளுக்கு முன்பு முறையான தொலை தொடர்வு வசதிகள் இல்லாத காரணத்தால் ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் கடிதம் மூலமாக தான் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த நிலை மாறி, தொலைபேசிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் மூலம்  ஒருவர் மற்றவரோடு உரையாட முடிந்தது. அதற்கு பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக வீடியோ கால் உள்ளிட்ட அம்சங்கள் வந்தன. தற்போது ஒருவர் மற்றவரை தொடர்பு கொள்ள பல செயலிகள் வந்துவிட்டன. இருப்பினும் பெரும்பாலான மக்கள் மெட்டா நிறுவனத்தில் வாட்ஸ் அப் செயலியையே அதிகம்  பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் செயலி பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாகவும், பாதுகாப்பானதாகவும் இருப்பதால் மக்கள் அதை பயன்படுத்துகின்றனர். மெட்டா நிறுவனமும் தனது பயனாளர்களுக்கு வேண்டிய புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்தின் புதிய வாட்ஸ்அப் அப்டேட்

மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் ஃபேவரைட்ஸ் ஃபில்டர் எனப்படும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் தாங்கள் அதிகம் பேசும் அல்லது பயன்படுத்தும் நபர்களின் உரையாடல் அல்லது குழுக்களின் உரையாடலை எளிதாக கண்டுபிடிக்க உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டின் அம்சம் என்ன, அதை எப்படி பயன்படுத்துவது என விரிவாக பார்க்கலாம்.

 வாட்ஸ்அப்பின் ஃபேவரைட்ஸ் ஃபில்டர் என்றால் என்ன?

வாட்ஸ்அப்பின் ஃபேவரைட்ஸ் ஃபில்டர் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நபர்கள் மற்றும் குழுக்களை ஒரு பட்டியலாக உருவாக்க உதவும் புதிய அம்சம் ஆகும். இந்த பட்டியலை உங்கள் உரையாடல்களின் வரிசையில் முன் வைத்திருக்க இந்த புதிய அப்டேட் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் குரூப்கள் என அனைத்தையும் இந்த புதிய அம்சத்தின் மூலம் வரிசை படுத்திக் கொள்ளலாம். வாட்ஸ்அப்பில் அதிக காண்டாக்ட்களை வைத்திருப்பவர்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூல  அவர்கள் தங்களுக்கு தேவையான உரையாடல்களை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Gpay : கூகுள் பே யூஸ் பண்றீங்களா? உஷார்.. பணத்தை திருடும் புது மோசடி.. போலீஸ் எச்சரிக்கை!

சில சமயம் அலுவலக குழுக்களில் இருந்து அதிகப்படியான குறுஞ்செய்தி வரும். அவ்வாறு வரும்போது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உரையாடல்கள் கீழே சென்றுவிடும். எனவே இந்த புதிய செயலியில் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான உரையாடல்களை எப்பொழுதும் வாட்ஸ்அப்பின் மேலே இருக்கும்படி செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News