5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Motorola edge 40 neo : செம ஸ்லிம்.. சூப்பர் டிஸ்பிளே.. அசத்தல் போனை களமிறக்கும் மோட்டோரோலா!

New Mobile Launch | அந்த வகையில், சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனம், மோட்டோ G85, மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மற்றும் மோட்டோரோலா ராஸ்ர் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள இந்த புதிய மாடல் மொபைல் போன் மிகவும் மெல்லிய தோற்றத்துடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

Motorola edge 40 neo : செம ஸ்லிம்.. சூப்பர் டிஸ்பிளே.. அசத்தல் போனை களமிறக்கும் மோட்டோரோலா!
டீசர்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 25 Jul 2024 18:52 PM

மோட்டோரோலா : இந்தியாவின் முன்னணி மொபைல் நிறுவனங்களில் ஒன்று மோட்டோரோலா.  மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனம், மோட்டோ G85, மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா மற்றும் மோட்டோரோலா ராஸ்ர் ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இந்நிலையில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ள இந்த புதிய மாடல் மொபைல் போன் மிகவும் மெல்லிய தோற்றத்துடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ஃபிலிப்கார்ட் மூலம் வாங்கிக்கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிக கடுமையான சூழல்களில் பயன்படுத்த சிறந்த ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா வெளியிட்டுள்ள டீசரின் படி, இந்த புதிய ஸ்மார்ட்போன் மிக கடுமையான சூழல்களில் பயன்படுத்த பாதுகாப்பானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த மொபைல் போன் MIL-STD-810H சான்றிதழுடன் கூடிய உலகின் மிக மெல்லிய ஸ்மார்ட்போன் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனை கடும் வெயில், மழை மற்றும் பனி ஆகிய சூழ்நிலைகளில் பயன்படுத்தினால் கூட எந்த பாதிப்பும் ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற அம்சங்கள் என்ன?

இந்த மொபைல் போன் IP54 மதிப்பீட்டுடன் 7.68 மிமி அளவு கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த டீசரின் படி, இந்த ஸ்மார்ட்போனில் பரந்த டிஸ்பிளேவுடன் கூடிய வளைந்த ஃப்ரேம்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இது மொபைல் போன் கையில் இருந்து வழுக்கி விழுந்துவிடாமல் பாதுகாக்க உதவுகிறது. பொதுவாகா மோட்டோரோலா மொபைல் போன்கள் கருப்பு நிறத்தில் மேட் ஃபினிஷில் வருவதால் இந்த மொபைல் போன்களும் அதே தோற்றத்தை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : விரைவில் அறிமுகமாகவுள்ள Vivo 40 and Vivo 40 Pro.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனா?

தகவலின்படி இது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் வரவிருக்கும் மொபைல் போன் குறித்த விவரம் இன்னும் தெரியவரவில்லை.

இதையும் படிங்க : BSNL-க்கு படையெடுக்கும் மக்கள்.. மீண்டும் சலுகைகளை வழங்க தொடங்கிய ஜியோ.. முழு விவரம் இதோ!

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் ரூ.23,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய பதிப்பின் விலை இதே வரம்பில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 40 நியோ  144Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.55 இன்ச் POLED வளைந்த டிஸ்பிளேவுடன் வருகிறது. இது தண்ணீர் மற்றும் தூசி பாதுகாப்பு கொண்டது. இந்த போன் கேம் விளையாட சிறந்ததாக கருதப்படுகிறது.

Latest News