அப்படி என்ன வீடியோ? கூகுள் சுந்தர் பிச்சைக்கு நோட்டீஸ்.. நீதிமன்றம் அதிரடி!

Google CEO Sundar Pichai: யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு கோபத்தை கொடுத்துள்ளது. இந்த வீடியோ மீது மும்பை நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை ஜனவரி 3ஆம் தேதி நடைபெறுகிறது.

அப்படி என்ன வீடியோ? கூகுள் சுந்தர் பிச்சைக்கு நோட்டீஸ்.. நீதிமன்றம் அதிரடி!

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை

Published: 

03 Dec 2024 17:40 PM

கூகுள் சுந்தர் பிச்சைக்கு நோட்டீஸ்: தியான் அறக்கட்டளை என்ற குழுவின் நிறுவனரை புண்படுத்தும் இந்த வீடியோ, அவரை அவமரியாதையாக விவரிக்கிறது. இந்த வீடியோவை நீக்குமாறு யூடியூப் நிறுவனத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இந்த வீடியோ இன்னமும் நீக்கப்படவில்லை. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாத சுந்தர் பிச்சை ஏன் விளைவுகளை சந்திக்கக் கூடாது என நீதிபதி கேள்வியெழுப்பி உள்ளார். இந்த வீடியோ கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நீதிமன்ற உத்தரவை வீடியோ தளம் பின்பற்றாததால் மும்பையில் உள்ள நீதிமன்றம் அவருக்கு சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சர்ச்சைக்குரிய வீடியோ

சில ஆண்டுகளுக்கு முன், தியான் அறக்கட்டளை, யூடியூப் மீது அவமானகரமான வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து புகார் அளித்தது. இந்தியாவில் வீடியோ அகற்றப்பட்டாலும், மற்ற நாடுகளில் அதை இன்னும் பார்க்க முடியும்.

இதையும் படிங்க : மாணவர் டூ முதியவர் வரை.. பல கோடிகள் இழப்பு.. ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’யில் தப்பிப்பது எப்படி?

இந்த வீடியோவை உலகளவில் அகற்றுமாறு நீதிமன்றம் தெளிவாகக் கேட்டுக் கொண்டது. எனினும், இந்த உத்தரவை கூகுள் பின்பற்றவில்லை. அவர்கள் அதை இந்தியாவில் மட்டுமே தடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 3, 2025 அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு ஒத்திவைப்பு

இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள தியான் அறக்கட்டளை நிர்வாகிகள் யோகி அஸ்வினியின் நற்பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் ஏற்படுத்துவதாக கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: தமிழ்நாட்டில் தெரியுமா?

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?