OTT : மாதாந்திர பிளான்களின் விலையை உயர்த்திய Netflix.. அதிர்ச்சியில் பயனர்கள்.. எவ்வளவு தெரியுமா?
Netflix | பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்கு அம்சமாகவும் மிகவும் விருப்பமான ஓடிடி தளமாகவும் விளங்கு நெட்பிளிக்ஸ் தனது மாதாந்திர அடிப்படை பிளான்களின் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயனர்கள் தங்களுக்கு வந்த குறுஞ்செய்திகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக ரூ.1000-க்கு வழங்கப்பட்ட பிளான் தற்போது ரூ.1,300 வரை விலை ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி : வருவாயை பெருக்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம். திரையரங்குகளில் சினிமா பார்த்த காலம் மாறி வீட்டிலே சினிமா பார்க்கும் காலம் வந்துவிட்டது. திரையரங்குகளில் திரைப்படம் ரிலீசாவது போல், ஓடிடி தளங்களிலும் அவ்வப்போது திரைப்படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. திரைப்படங்கள் மட்டுமன்றி, குறும்படம், சீரிஸ் உள்ளிட்ட பல்வேறும் வகையாக பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளன ஒடிடி தளங்கள். திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை விட வீட்டில் அமர்ந்து நிதானமாக படம் பார்ப்பதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். அவ்வாறு மக்களால் அதிகம் விரும்பப்படும் ஓடிடி தளங்களில் ஒன்றுதான் நெட்பிளிக்ஸ்.
கட்டணத்தை உயர்த்திய நெட்பிளிக்ஸ்
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சாதாரனமான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வருவாயை அதிகரிக்கும் நோக்கில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளம்பரம் இல்லாமல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தை பயன்படுத்த வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என பயனர்களுக்கு குறுஞ்செய்தி வந்ததாக ஏராளமான பயனர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து ரெட்டிட் தளத்தில் பதிவிட்ட பயனர் ஒருவர், “எனக்கு நெட்ப்ளிக்ஸ் ஓடிடி செயலியில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் பிளானின் கடைசி தேதி ஜூலை 13, நீங்கள் தொடர்ந்து பார்க்க வேண்டும் என்றால் புதிய பிளான்களை தேர்ந்தெடுங்கள்” என்று அதில் குறிப்பிட்டிருந்தது என அவர் பதிவிட்டுள்ளார். அந்த பயனர் தற்போது ரூ.1000-க்கான அடிப்படை பிளானை பயன்படுத்தி வருகிறார்.
ஆனால் நெட்ப்ளிக்ஸின் தற்போதைய விலையேற்றத்தின்படி, விளம்பரத்துடன் பார்க்க வேண்டுமானால் ரூ.580, செலுத்த வேண்டும். இதுவே விளம்பரம் இல்லாமல் பார்க்க வேண்டுமானால் ரூ.1,300 செலுத்த வேண்டும். அதுமட்டுமன்றி 4K தரத்தில் பார்க்க வேண்டுமென்றாக் ரூ.2,000 செலுத்த வேண்டும். ரெட்டிட் போஸ்டின் படி இந்த குறுஞ்செய்திகளை பெற்றவர்கள் பெரும்பாலும் கனடா அல்லது இங்கிலாந்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். முன்னதாக இந்த ஆண்டு இரண்டாம் பாகத்தில் விலை ஏற்றப்படும் என நெட்ப்ளிக்ஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்தில் புதிய உறுப்பினர்களுக்கான அடிப்படை திட்டத்தை நெட்பிளிக்ஸ் நிறுத்தியது. இருப்பினும் அமெரிக்காவில் இருக்கும் சந்தாதாரர்களுக்கான அடிப்படை திட்டத்தை எப்போது படிப்படியாக நிறுத்த தொடங்கும் என்பதை நெட்பிளிக்ஸ் இன்னும் குறிப்பிடவில்லை. இந்த நடவடிக்கைகள் நெட்பிளிக் அதன் சந்தா சலுகைகளை வலுப்படுத்தவும் அதன் விளம்பரர்களை நோக்கி பயனர்களை தள்ளவும் திட்டம் வகுத்துள்ளது. அடிப்படை திட்டத்தை படிப்படியாக நீக்குவதன் மூலம் நெட்பிளிக்ஸ் வருவாய் வளர்ச்சியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.