5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gmail Scam : ஜிமெயில் பயனர்களை குறிவைக்கும் புதிய மோசடி.. எச்சரிக்கும் அமெரிக்க நிறுவனம்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

New Scam in Gmail | ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் கூகுளின் ஸ்டோரேஜ் சேவைகளை பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வைத்து வரும் நிலையில், இந்த மோசடி மூலம் அனைத்து தகவல்களும் திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே, பயனர்கள் இந்த மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்படுகின்றனர்.

Gmail Scam : ஜிமெயில் பயனர்களை குறிவைக்கும் புதிய மோசடி.. எச்சரிக்கும் அமெரிக்க நிறுவனம்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 15 Oct 2024 12:37 PM

ஜிமெயில் பயனர்களை குறிவைக்கும் ஒரு புதியவித மோசடி அரங்கேறி வருகிறது. இந்த மோசடியின் மூலம், பயனர்களின் தனிப்பட்ட மற்றும் முக்கிய தகவல்களை திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் கூகுளின் ஸ்டோரேஜ் சேவைகளை பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களை சேகரித்து வைத்து வரும் நிலையில், இந்த மோசடி மூலம் அனைத்து தகவல்களும் திருடப்படும் அபாயம் உள்ளது. எனவே, பயனர்கள் இந்த மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், அது என்ன ஜிமெயில் மோசடி, அதை மோசடி காரர்கள் எப்படி நிகழ்த்துகின்றனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : WhatsApp Feature : இனி வாட்ஸ்அப்பிலும் “Chat Theme” செட் செய்யலாம்.. விரைவில் அறிமுகம்!

ஜிமெயில் மோசடிகள் அரங்கேறுவது எப்படி?

இந்த மோசடியில், மோசடிக்காரர்களிடம் இருந்து உங்களது மொபைல் எண் அல்லது ஜிமெயிலுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். அதில் Gmail Account Recovery செய்வதற்கான அனுமதி கேட்கப்படும். இதில் என்ன அதிர்ச்சியூட்டும் விஷயம் என்றால், இந்த Gmail Account Recovery-க்கு நீங்கள் விருப்பம் தெரிவித்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அல்லது மெயில் வரும். அதற்கு நீங்கள் அனுமதித்தால் உங்களது தகவல்கள் அனைத்தும் நொடி பொழுதில் திருடப்படும். ஒருவேளை நீங்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை என்றால், கூகுளின் அதிகாரப்பூர்வ எண்ணில் இருந்து வருவது போல உங்களுக்கு ஒரு செல்போன் அழைப்பு வரும்.

இதையும் படிங்க : Jio Recharge : அசத்தல் அம்சங்களுடன் 2 புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ!

ஜிமெயில் மோசடி குறித்து எச்சரிக்கும் அமெரிக்க நிறுவனம்

இவ்வாறு பொதுமக்களை தொடர்புக்கொண்டு பேசும் மோசடி கும்பல், அமெரிக்க அதிகாரிகளை போல பேசுவார்கள். அவர்களின் நோக்கம் எல்லாம் பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்களை திருடுவது மட்டுமே. கூகுளின் அதிகாரப்பூர்வ எண்ணில் இருந்து அழைப்பது போல போன் கால் செய்வது, அதிகாரிகளை போல பேசுவது ஆகியவற்றை நம்பும் பொதுமக்கள் அவர்கள் அனுப்பும் குறுஞ்செய்திக்கு அனுமதி அளித்துவிட்டால், அவர்களின் தகவல்கள் மொத்தமாக திருடப்படும் என்று அமெரிக்காவை சேர்ந்த Mitrovic நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : Budget Smartphones : அக்டோபர் மாதம் விற்பனையில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

ஜிமெயில் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

  • நீங்கள் initiate செய்யாத Gmail Account Recovery-க்கான மெயில் அல்லது குறுஞ்செய்தி ஏதேனும் வந்தால் அதற்கு பதில் அளிக்காதீர்கள். காரணம், தகவல் திருட்டிற்கு நீங்கள் இரையாக்கப்படலாம் என்பதற்கான முதல் அறிகுறி இதுதான்.
  • கூகுளின் அதிகாரப்பூர்வ எண்ணில் இருந்து வருவது போல ஏதேனும் அழைப்புகள் வந்தால் அவற்றை ஏற்காதீர்கள். காரணம் கூகுள் பயனர்களை நேரடியாக தொடர்புக்கொள்ளாது.
  • உங்களுக்கு குறுஞ்செய்தி வரும் மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்களை ஒரு முறைக்கு பல முறை சரிபார்ப்பது அவசியம். போலியான மின்னஞ்சல் முகவரியில் ஏதேனும் பிழை அல்லது எழுத்துக்களில் மாற்றம் இருக்கும்.
  • உங்கள் ஜிமெயில் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை அடிக்கடி சோதனை செய்துக்கொள்ளுங்கள். உங்கள் ஜிமெயிலின் Settings-க்கு சென்று, பாதுகாப்பு சரியாக உள்ளதா, ஏதேனும் சந்தேகத்திற்குறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக என்பதை சோதனை செய்து பாருங்கள்.
  • இமெயிலை சோதனை செய்து பாருங்கள். உங்களுக்கு Gmail Account Recovery குறித்து ஏதேனும் மெயில் வந்தால் அதை வழக்கமான மெயிலுடன் ஒப்பிட்டு பாருங்கள். இதன் மூலம் உங்களுக்கு கூகுளிடம் இருந்து மெயில் வந்துள்ளதா அல்லது மோசடிக்காரர்களிடம் இருந்து வந்துள்ளதா எனபதை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.

இதையும் படிங்க : Google Chat : இனி கூகுள் சாட்டில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள்!

மேற்கண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் ஜிமெயில் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News