Xiaomi 15 : நாளை அறிமுகமாகிறது ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்! - Tamil News | New Xiamoi 15 series smartphones launching in china tomorrow know the price and specification | TV9 Tamil

Xiaomi 15 : நாளை அறிமுகமாகிறது ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்!

Mobile Launch | ஜியோமி 15 மற்றும் ஜியோமி 15 ப்ரோ ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்கள் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், ஜியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. நாளை சீனாவின் தனது புதிய 2 ஸ்மார்ட்போன்களை ஜியோமி அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அவற்றை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Xiaomi 15 : நாளை அறிமுகமாகிறது ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்!

ஜியோமி 15

Published: 

22 Oct 2024 19:13 PM

ஜியோமி நிறுவனத்தின் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் நாளை (அக்டோபர் 23) அறிமுகம் செய்யப்பட உள்ளன. ஜியோமி, ஜியோமி 15 மற்றும் ஜியோமி 15 ப்ரோ ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஜியோமி அறிமுகம் செய்ய உள்ள ஜியோமி 15 மற்றும் ஜியோமி 15 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : BSNL Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் லோகோ.. இந்தியா வார்த்தை நீக்கம்!

புதிய அம்சத்துடன் அறிமுகம் செய்யப்படும் ஜியோமி ஸ்மார்ட்போன்கள்

ஜியோமி 15 மற்றும் ஜியோமி 15 ப்ரோ ஆகிய மாடல் ஸ்மார்ட்போன்கள் நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், ஜியோமி 15 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. நாளை சீனாவின் தனது புதிய 2 ஸ்மார்ட்போன்களை ஜியோமி அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அவற்றை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, புதியதாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஸ்நாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் ஸ்நாப்டிராகன் 8 ஜென் 4 அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஜியோமி 15 சீரீஸில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் இந்த அம்சத்தை, சமீபத்தில் நடந்து முடிந்த ஹவாய் உச்சி மாநாட்டில் ஸ்நாப்டிராகன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Budget Smartphone : தீபாவளி சேல்.. பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஜியோமி 15 சீரீஸின் விலை மற்றும் மற்ற அம்சங்கள்

ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், ஜியோமி 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விட விலை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது ஜியோமி 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை விடவும், 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கூடுதலாக விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜியோமி 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ரூ.69,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி, கணக்கிட்டு பார்த்தால் ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சுமார் 79,999 வரை விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : Pixel 9 Pro XL : கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோமி 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜியோமி நிறுவனம் தனது புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதாவது, ஜியோமி 14 மற்றும் ஜியோமி 14 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ஜியோமி 14 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஜியோமி தயாரித்த நிலையில், அதை சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்தது. தற்போது ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் ஜியோமி அதே நடைமுறையை கடைபிடிக்கலாம என கூறப்படுகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் இந்தியாவில் ஜியோமி 15 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாது.

ஜியோமி 15 சீரீஸ் எப்போது அறிமுகம் செய்யப்படும்

ஜியோமி 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கால அளவோடு ஒப்பிடுகையில், ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும். அதாவது 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Flipkart Big Diwali Sale : இன்று தொடங்கியது பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!

ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள்

ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஜியோமி 13 மற்றும் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை போலவே இருக்கும் என கூறப்படுகிறது. ஜியோமி 13 மற்றும் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய 3.36 இன்ச் Flat AMOLED டிஸ்பிளே கொண்டிருந்தன. ஆனால் ஜியோமி 15 சீரீஸ் ஸ்மார்ட்போன் 6.78 இன்ச் quad-curved 2K AMOLED டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!