5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paytm : பேடிஎம் நிறுவனத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதா செபி?.. பேடிஎம் கூறுவது என்ன?

SEBI Notice | பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ், ஊடக அறிக்கைகளை மறுத்துள்ளது. பேடிஎம் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருப்பதால், தேவையான அனைத்து தகவல்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளது. செபியின் அறிவிப்பு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தனது நிதிநிலை அறிக்கைகளில் நிவர்த்தி செய்ய முயற்சித்துள்ளது.

Paytm : பேடிஎம் நிறுவனத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியதா செபி?.. பேடிஎம் கூறுவது என்ன?
பேடிஎம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 30 Aug 2024 13:20 PM

செபி அறிக்கை குறித்து பேடிஎம் விளக்கம் : Fintech நிறுவனமான பேடிஎம், சந்தை கட்டுப்பாட்டாளர் SEBI இடம் இருந்து புதிய அறிவிப்பைப் பெற்றதாக வெளியான அனைத்து செய்திகளையும் மறுத்துள்ளது. ஐபிஓவில் முறைகேடுகள் நடந்ததால் அந்நிறுவனத்துக்கு செபி இந்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்த தகவல்களை பங்குச் சந்தைக்கு அனுப்பி, அது குறித்து வெளியான அனைத்து தகவல்களையும் பேடிஎம் நிறுவனம் மறுத்துள்ளது. செபியிடம் இருந்து புதிய அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றும் பேடிஎம் நிறுவனம் கூறியுள்ளது. அதாவது அது கடந்த ஜனவரி ஜனவரி – மார்ச் காலாண்டில் செபி அனுப்பிய நோட்டீஸ் என்றும் அதற்கு சமீபத்தில் வருடாந்திர நிதி முடிவுகளில் பதில் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : Adani Group : இந்தியாவில் கடனை வாங்கி குவிக்கும் அதானி.. அதிக வட்டியை குறைக்க மாஸ்டர் பிளான்?

செபி நோட்டீஸ் குறித்த ஊடக செய்திகளை நிராகரித்த பேடிஎம் நிறுவனம்

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான One97 கம்யூனிகேஷன்ஸ், பேடிஎம் நிறுவனத்திற்கு செபி நோட்டீஸ் அனுப்பியதாக வெளியாக ஊடக அறிக்கைகளை மறுத்துள்ளது. பேடிஎம் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக இருப்பதால், தேவையான அனைத்து தகவல்களையும் பகிரங்கப்படுத்தியுள்ளது. செபியின் அறிவிப்பு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் தனது நிதிநிலை அறிக்கைகளில் நிவர்த்தி செய்ய முயற்சித்துள்ளது.

செபியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் பேடிஎம் நிறுவனம்

சந்தை கட்டுப்பாட்டாளர் செபியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பேடிஎம் கூறியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்களை சேகரித்து வருவதாகவும் பேடிஎம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செபியின் அனைத்து தொடர்புடைய விதிகள் மற்றும் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதாக நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Tata Sons : ஒரே நாளில் ரூ.20300 கோடி கடனை அடைத்த டாடா சன்ஸ்.. வாய் அடைத்து போன ஆர்பிஐ!

நிதி முடிவுகளில் எந்த தாக்கமும் இல்லை – பேடிஎம் நிறுவனம்

பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு செபி நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது அடுத்து, அது குறித்து 97 கம்யூனிகேஷன் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஜூன் 30, 2024 மற்றும் மார்ச் 31, 2024 ஆகிய முந்தைய காலாண்டுக்கான நிதி முடிவுகளுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று முதலீட்டாலர்களுக்கு ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

Latest News