OnePlus : பச்சை கோடு முதல் மதர்போர்டு பிரச்னை வரை.. நீண்ட விளக்கமளித்த ஒன்பிளஸ் நிறுவனம்! - Tamil News | One plus gave detailed explanation on issues including green line and more in its smartphones | TV9 Tamil

OnePlus : பச்சை கோடு முதல் மதர்போர்டு பிரச்னை வரை.. நீண்ட விளக்கமளித்த ஒன்பிளஸ் நிறுவனம்!

Updated On: 

09 Sep 2024 12:11 PM

Explanation | ஒன்பிளஸ் நிறுவனம் இவ்வாறு கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த நிலையில், அந்த நிறுவனம் இந்தியாவில் மூடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நீண்ட விளக்கத்துடன் கூடிய அறிக்கை ஒன்றை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

OnePlus : பச்சை கோடு முதல் மதர்போர்டு பிரச்னை வரை.. நீண்ட விளக்கமளித்த ஒன்பிளஸ் நிறுவனம்!

மாதிரி புகைப்படம் (Jaque Silva/SOPA Images/LightRocket via Getty Images)

Follow Us On

ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை : இந்தியாவின் முன்னணி மொபைல் போன் நிறுவனங்களில் ஒன்றாக ஒன்பிளஸ் நிறுவனம் உள்ளது. ஆனால் ஒன்பிளஸ் கடந்த சில ஆண்டுகளாக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. காரணம், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அப்டேட் செய்யும்போது பச்சை நிற கோடுகள் வருவதாக பயனர்கள் புகார் தெரிவித்தனர். எனவே மொபைல் போனில் பச்சை நிற கோடுகள் வந்தால் பயனர்களை தங்களின் மொபைல் போன்களை ஒன்பிளஸ் ஷோரூமுக்கு சென்று இலவசமாக சரிசெய்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்ததது. ஆனால் அந்த முயற்சியும் ஒன்பிளஸ் நிறுவனத்திற்கு கடும் விமர்சனத்தையே பெற்று தந்தது.

இதையும் படிங்க : Google Pixel : ரூ.23,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகைகளுடன் விற்பனையாகும் Google Pixel 9 Pro Fold.. முழு விவரம் இதோ!

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்து எழுந்த தொடர் குற்றச்சாட்டுகள்

காரணம், பெரும்பாலான பயனர்களின் மொபைல் திரையில் அந்த பச்சை நிற கோடுகள் தோன்றிய நிலையில், ஒன்பிளஸ் ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பல மணி நேரம் வரிசையில் காத்திருப்பதாக பயனர்கள் புகார் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமன்றி ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அப்போது பலரும் இனி ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டாம் என முடிவு செய்திருந்தனர். ஒன்பிளஸ் நிறுவனம் இவ்வாறு கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்த நிலையில், அந்த நிறுவனம் இந்தியாவில் மூடப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நீண்ட விளக்கத்துடன் கூடிய அறிக்கை ஒன்றை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தயாரிப்பு மற்றும் தரத்தில் நாங்கள் எந்த வித சமரசமும் செய்துக்கொள்ளவில்லை – ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது, மொபைல் போன்கள் தயாரிப்பு, அதன் தரம் ஆகியவற்றில் நாங்கள் எந்த வித சமரசமும் செய்து கொள்ளவில்லை. கடந்த சில நாட்களாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை சரி செய்ய நாங்கள் தயாராகவே உள்ளோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : iPhone 15 Series : அதிரடி தள்ளுபடியுடன் விற்பனையாகும் ஐபோன் 15 சீரீஸ்.. இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

உதவி எண்ணை அறிவித்த ஒன்பிளஸ்

மென்பொருள் அப்டேட்டுக்கு பிறகு கிரீன் லைன் மற்றும் மதர் போர்டு ஆகியவற்றில் கோளாறு எழுவதாக பயனர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. மேலும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க +1800 102 8411 என்ற எண்ணை பயனர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version