Oneplus 13 : விரைவில் அறிமுகமாக உள்ள ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன? - Tamil News | Oneplus 13 smartphone likely to launch soon know the specification of it | TV9 Tamil

Oneplus 13 : விரைவில் அறிமுகமாக உள்ள ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Published: 

08 Oct 2024 17:39 PM

New Mobile | ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் குவால்கமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC கொண்ட முதல் ஸ்மார்ட்போனகா இது இருக்கும்  என்று குவால்கமின் சமீபத்திய டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

1 / 5ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது அடுத்த சிறந்த அம்சங்களுடன் கூடிய ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், அந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 5

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் குவால்கமின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC கொண்ட முதல் ஸ்மார்ட்போனகா இது இருக்கும்  என்று குவால்கமின் சமீபத்திய டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

3 / 5

இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் 6,000mAh பேட்டரி அம்சம் உள்ளது. இதற்கு முந்தைய மாடல் ஸ்மார்ட்போனில் வெறும் 5,400mAh பேட்டரி அம்சம் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்த நிலையில், இது சிறந்த அம்சமாக கருதப்படுகிறது. 

4 / 5

இந்த ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் பன்ச் ஹோல் டிசைன் உடன் கூடிய பெரிய 6.8 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு தட்டையாக இருந்தாலும் ஸ்மார்ட்போனின் 4 முனைகளிலும் வளைந்த கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. 

5 / 5

இந்த ஸ்மார்ட்போனில் Ultrasonic Fingerprint Sensor கொடுக்கப்பட்டுள்ளது. இது விரல்களில்  தண்ணீர் அல்லது எண்ணெய் இருக்கும் பட்சத்தில், மொபைல் போனை அன்லாக் செய்ய பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 24GB RAM கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்னேகா...!
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
Exit mobile version