OnePlus Nord CE4 Lite : ரூ.3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட்.. முழு விவரம் இதோ! - Tamil News | OnePlus Nord CE4 Lite will sell with flat 3000 rupees offer on Diwali sale | TV9 Tamil

OnePlus Nord CE4 Lite : ரூ.3,000 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட உள்ள ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட்.. முழு விவரம் இதோ!

Published: 

23 Sep 2024 19:56 PM

Special Offer | தீபாவளி பண்டிகை, அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ஆகியவற்றை முன்னிட்டு ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட் ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

1 / 5தீபாவளி

தீபாவளி சிறப்பு சலுகை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை முன்னிட்டு ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட் ஸ்மார்ட் போன் மிக குறைந்தன் விலையில் விற்பனை செய்யப்பட்ட உள்ளது. குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

2 / 5

ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட் குறைந்த எடை கொண்ட சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். இதன் எடை வெறும் 191 கிராம் மட்டுமே ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 6.6 இன்ச் 120Hz AMOLED ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது. 

3 / 5

இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் மற்றும் 8GB RAM கொண்டுள்ளது. இது தினசரி பயன்பாடு மற்றும் கேமிங்கிற்கு சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 128 GB முதல் 256 GB வரை ஸ்டோரேஜ் அம்சம் கொண்டுள்ளது. 

4 / 5

ஒன்பிளஸ் இணையதளம் மூலம்  ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட் ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படும். அதுமட்டுமன்றி ரூ.1,000-க்கான கூப்பனும் வழங்கப்படும். இதன் மூலம் ரூ.3,000 தள்ளுபடியில் நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம். 

5 / 5

அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் நோட் சிஇ4 லைட் ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை ரூ.19,999 ஆக உள்ள நிலையில், வங்கி சலுகைகள் மற்று  தள்ளுபடிகளை பயன்படுத்தி இதை வெறும் ரூ.16,999-க்கு வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us On
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version