5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் சிறை தண்டனை.. ரூ.2,00,000 அபராதம்.. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Sim card usage | உலகிலேயே அதிகபட்சமாக ஒரு தனி நபர் 9 சிம் கார்டுகளை மற்றுமே பயன்படுத்த முடியும். அதற்கும் அதிகமாக சிம் கார்டுகளை பயன்படுத்தினால் முதற்கட்டமாக ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி அதிக சிம் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.2,00,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் சிறை தண்டனை.. ரூ.2,00,000 அபராதம்.. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 19 Jul 2024 11:44 AM

சிம் கார்டுகள் : உலகின் தொலைத்தொடர்வு வளர்ச்சி காரணமாக அனைவரும் செல்போன் பயன்படுத்துகின்றனர். கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனைன் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு என தனி சிம் கார்டுகளை வைத்துள்ளனர். குறிப்பாக ஒரு சிலர் அதிக சிம் கார்டுகளை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். நெட்வொர்க் பிரச்னை, மொபைல் எண் பிரச்னை அல்லது சிம் கார்டு தொலைந்துவிட்டால் என பல்வேறு காரணங்களுக்காக பல சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் இவ்வாறு செய்வது ஆபத்தில் முடியும் என பலருக்கும் தெரிவதில்லை. பல சிம் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு தனி நபர் எத்தனை சிம் கார்டுகளை பயன்படுத்தலாம், அதிக சிம் கார்டுகளை பயன்படுத்தினால் என்ன தண்டனை விதிக்கப்படும்  என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஒரு தனி நபர் எத்தனை சிம் கார்டுகளை பயன்படுத்தலாம்

சிம் கார்டுகள் பயன்படுத்துவது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். உலக அளவில் பார்க்கையில் ஒரு தனி நபர் அதிகப்படியாக 9 சிம் கார்டுகளை பயன்படுத்தலாம். ஆனால் ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் அது 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடி மற்றும் தகவல் திருட்டு மூலம் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : Google Pay: கூகுள் பே பணம் அனுப்புவதில் பிரச்னையா? – என்ன செய்யலாம்?

அளவுக்கு மீறி சிம் கார்டுகளை பயன்படுத்தினால் என்ன தண்டனை கிடைக்கும்

முன்னதாக கூறியபடியே உலகிலேயே அதிகபட்சமாக ஒரு தனி நபர் 9 சிம் கார்டுகளை மற்றுமே பயன்படுத்த முடியும். அதற்கும் அதிகமாக சிம் கார்டுகளை பயன்படுத்தினால் முதற்கட்டமாக ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி அதிக சிம் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.2,00,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதிக சிம் கார்டுகளை பயன்படுத்தி அதன் மூலம் மோசடி செய்பவர்களுக்கு சுமார் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.50,00,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Gpay : கூகுள் பே யூஸ் பண்றீங்களா? உஷார்.. பணத்தை திருடும் புது மோசடி.. போலீஸ் எச்சரிக்கை!

ரீ வெரிஃபிகேஷன்

9-க்கும் மேல் சிம் கார்டுகளை வைத்திருப்பபர்களின் மொபைல் எண்கள் ரீ வெரிஃபிகேஷன் செய்யப்படுகிறது. அப்போது பயனர்களுக்கு மூன்று விருப்பங்கள் வழங்கப்படுகிறது. அதாவது சிம் கார்டுகளை ஒப்படைப்பது, சிம் கார்டுகளை மாற்றுவது மற்றும் கூடுதல் சிம் கார்டுகளை துண்டிப்பது. இதில் பயனர்கள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். பாதுகாப்பான தொலைத்தொடர்பை உருவாக்கவும், மோசடிகளை குறைக்கவும் இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News