Jio Plan : ரூ.888 திட்டம்.. 15 பிரிமீயம் ஒ.டி.டி சேவை: ஜியோ அசத்தல் ஆஃபர்!

Jio launches new premium OTT: ஜியோ புதிய பிரீமியம் OTT பிராட்பேண்ட் தரவுத் திட்டத்தை மாதம் ₹888க்கு வழங்குகிறது.

Jio Plan : ரூ.888 திட்டம்.. 15 பிரிமீயம் ஒ.டி.டி சேவை: ஜியோ அசத்தல் ஆஃபர்!

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்

Updated On: 

12 May 2024 09:36 AM

ரிலையன்ஸ் ஜியோ புதிய ஓவர்-தி-டாப் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இது, நெட்ஃபிக்ஸ் அடிப்படை சந்தா உள்பட 15 பிரீமியம் சேவை பயன்பாடுகள் மற்றும் பிராட்பேண்ட் திட்டத்துடன் மாதம் ரூ.888 விலையில் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் லைட், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் அடிப்படை சந்தா உட்பட 15 பயன்பாடுகளின் பிரீமியம் சேவைகளை பெற முடியும். மேலும், 30 எம்பிபிஎஸ் பிராட்பேண்ட் திட்டத்துடன் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் தெரிவித்துள்ளது.முன்னதாக, ஜியோஃபைபர் ₹1,499 திட்டத்தைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு நெட்ஃபிக்ஸ் அணுகல் முன்பு கிடைத்தது. அதே நேரத்தில் நுழைவு நிலை 30 மெகாபிட் பிராட்பேண்ட் திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்கு பொழுதுபோக்கு பயன்பாடுகளுக்கான அணுகல் கிடைக்கவில்லை.

இதேபோல், ஏர்ஃபைபர் (AirFiber) வாடிக்கையாளர்களுக்கான நெட்பிளிக்ஸ் (Netflix) அணுகல் மாதத்திற்கு ₹1,499 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் மட்டுமே கிடைக்கும்.

இதையும் படிங்க : OpenAI : கூகுளுக்கு ஆப்பு வைக்க பிளான்.. புதிதாக களம் இறங்கும் ஓபன்ஏஐ!

இது குறித்து ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்லிமிடெட் டேட்டா பலன்களுடன் இணைந்து இறுதி ஸ்ட்ரீமிங் அனுபவத்தை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது, புதிய போஸ்ட்பெய்ட் திட்டம், மாதத்திற்கு ₹888 விலையில், ஜியோஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்… சந்தாதாரர்கள் பிரபலமான 15க்கும் மேற்பட்ட முன்னணி OTT பயன்பாடுகளுக்கான பிரத்யேக அணுகலைப் பெறுகிறார்கள்” எனக் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஜியோ ஐபிஎல் தன் தனா தன் ஆஃபரும் இந்த திட்டத்தில் பொருந்தும். தகுதியுள்ள சந்தாதாரர்கள் தங்கள் ஜியோ ஹோம் பிராட்பேண்ட் இணைப்பில் 50 நாள் தள்ளுபடி கிரெடிட் வவுச்சரைப் பெறலாம்.

ஜியோ (JIO) DDD ஆஃபர், 31 மே 2024 வரை கிடைக்கும், இது நடந்து கொண்டிருக்கும் T20 சீசனுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. அதாவது ஐ.பி.எல் ரசிகர்களின் ஸ்ட்ரீமிங் சேவையை இது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?
தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...
நடிகை டாப்ஸி பண்ணுவின் சினிமா பயணம்..!