5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jio : ஜியோ கொடுத்த ஷாக்.. இனி 5ஜி இப்படித்தான் .. விலை உயர்வால் வந்த மாற்றம்!

Prepaid and Postpaid plans | ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு பிளான்களின் விலையை உயர்த்தியுள்ளது. அதுமட்டுமன்றி குறிப்பிட்ட சில பிளான்களுக்கு 5ஜி சேவையை துண்டித்துள்ளது. சராசரியாக ஒரு நபருக்கு சுமார் 12% வரை விலை உயர்த்தியுள்ளது. ஜியோவின் இந்த அதிரடி விலையேற்றத்தால் பயனர்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.

Jio : ஜியோ கொடுத்த ஷாக்.. இனி 5ஜி இப்படித்தான் .. விலை உயர்வால் வந்த மாற்றம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 04 Jul 2024 14:23 PM

ஜியோ : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ப்ரீ பெய்டு மற்றும் போஸ் பெய்டு பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த அதிரடி மாற்றம் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 5G சேவைகள் மூலம் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் ஒரு பயனருக்கு சராசரியாக 12% வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிளான்களின் விலை உயர்த்தப்பட்டது மட்டுமன்றி சில குறிப்பிட்ட ப்ரீ பெய்டு திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5G தரவையும் நிறுத்தியுள்ளது ஜியோ நிறுவனம். ஜியோவின் இந்த அதிரடி விலையேற்றம் பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜூலை 3 முதல் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் வரம்பற்ற 5G டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. அவை ஒரு நாளுக்கு 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவை வழங்கும். அதாவது இனிமேல் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா அல்லது அதற்கும் குறைவான திட்டங்களுக்கு 5ஜி டேட்டா கிடைக்காது. அதன்படி குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு மட்டுமே 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

5ஜி டேட்டாவுடன் கூடிய 28 நாள் திட்டங்கள்

ரூ.349 திட்டம் : முன்பு ரூ.299 ஆக இருந்த இந்த திட்டம் தற்போது ரூ.349 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் போன் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் அடங்கும்.

ரூ.399 திட்டம் : முன்பு ரூ.349-க்கு வழங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது ரூ.399 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2.5ஜிபி டேட்டா, அன்லிமிடெட் போன் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் அடங்கும்.

ரூ.449 திட்டம் : முன்பு ரூ.399 ஆக இருந்த இந்த திட்டம் தற்போது ரூ.449 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்பப்டுகிறது. அதுமட்டுமன்றி அன்லிமிடெட் போன் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களும் இதில் அடங்கும்.

5ஜி டேட்டாவுடன் கூடிய 56 நாள் திட்டம்

ரூ.629 திட்டம் : ரூ.533 ஆக் இருந்த இந்த திட்டம் தற்போது ரூ.629 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் போன் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களும் இதில் அடங்கும்.

5ஜி டேட்டாவுடன் கூடிய 85 நாள் திட்டங்கள்

ரூ.859 திட்டம் : முன்பு ரூ.719-க்கு வழங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது ரூ.859 ஆக விலை உயர்த்தப்ப்ட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் போன் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களும் இதில் அடங்கும்.

ரூ.1199 திட்டம் : முன்பு ரூ.999 ஆக இருந்த இந்த திட்டம் தற்போது ரூ.1199 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் போன் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களும் இதில் அடங்கும்.

இதையும் படிங்க : Whatsapp AI : இனி வாட்ஸ்அப்பிலும் AI.. மெட்டாவின் அதிரடி அறிவிப்பு.. சிறப்பு அம்சங்கள் என்ன?

5ஜி டேட்டாவுடன் கூடிய வருடாந்திர திட்டம்

ரூ.3599 திட்டம் : முன்பு ரூ.2999 ஆக இருந்த இந்த திட்டம் தற்போது ரூ.3599 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு நாளுக்கு 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் போன் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களும் இதில் அடங்கும்.

மேற்குறிப்பிட்ட இந்த திட்டங்களை தவிர மற்ற திட்டங்களுக்கு இனி 5ஜி சேவை வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News