Samsung Galaxy S24 FE : சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன? - Tamil News | Samsung introduced Samsung Galaxy S24 FE at the starting price of 59999 | TV9 Tamil

Samsung Galaxy S24 FE : சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

Published: 

27 Sep 2024 17:17 PM

New Mobile | சாம்சங் நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன, என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5சாம்சங்

சாம்சங் நிறுவனம் தனது புது மாடல் ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பயனர்கள் சிறந்த கேமரா அனுபவத்தை பெறுவதற்காக AI Photo Assist Feature கொடுக்கப்பட்டுள்ளது. 

2 / 5

இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே உள்ளது. இதில் நீடித்து உழைக்கும் திறன் கொண்ட 4,700 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சக்திவாய்ந்த Exynos 2400 சீரீஸ் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

3 / 5

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போன் மொத்தம் 5 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, நீலம், கிராஃபைட், சாம்பல் நிறம், பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

4 / 5

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8GB+128GB மற்றும் 8GB+256GB என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. 

5 / 5

இந்தில் 8GB+128GB வேரியண்ட் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கும், 8GB+256GB வேரியண்ட் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போன் ரூ.65,999-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Follow Us On
நடிகை ஐஸ்வர்ய லட்சுமியின் நியூ ஆல்பம்
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Exit mobile version