‘2 ஸ்பீக்கர் போதும், ஹோம் தியேட்டர் ரெடி’: சாம்சங் வயர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகம்

Samsung Frame Wireless Speaker: சாம்சங்கின் ஸ்பேஸ்ஃபிட் சவுண்ட் ப்ரோ தொழில்நுட்பமானது அறை ஒலியியலை பகுப்பாய்வு செய்கிறது. இதன் மூலமும் அதற்கேற்ப ஒலி வெளியீட்டை மாற்றியமைப்பதன் மூலமும் பயனரின் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது ஏர்ப்ளே (AirPlay) 2 உடன் வேலை செய்கிறது. டிவி மற்றும் மியூசிக் ஃபிரேம் ஆகிய இரண்டிற்கும் ரிமோட் கண்ட்ரோல் ஸ்போர்ட்டி கனெக்ட், க்ரோம்கேஸ்ட் உடன் வருகிறது. இதுமட்டுமின்றி வைஃபை ஸ்மார்ட் கனெக்டிவிட்டி சிறந்த ஸ்மார்ட் அனுபவத்தை வழங்குகிறது.

2 ஸ்பீக்கர் போதும், ஹோம் தியேட்டர் ரெடி: சாம்சங் வயர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகம்

சாம்சங் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள்

Published: 

26 Jun 2024 09:49 AM

சாம்சங் மியூசிக் ஃப்ரேம் வயர்லெஸ் அறிமுகம்: இந்தியாவில், சாம்சங் தனது புதிய மியூசிக் ஃப்ரேம் வயர்லெஸ் புளூடூத் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தி உள்ளது. சாம்சங்கின் புதிய புதுமையான சாதனத்தில் ஆறு ஸ்பீக்கர்கள் உள்ளன. இதில் அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் டோல்பி ஆட்டம்ஸ் சவுண்ட் ஆகியவை அடங்கும். மேலும், ஸ்பீக்கரில் ஒரு காட்சி அமைப்பும் உள்ளது. சாம்சங் மியூசிக் ஃபிரேம் டால்பி டிஜிட்டல் பிளஸ் ஒலியுடன் வருகிறது. இந்த அம்சம் 120W உடன் தெளிவான ஆடியோவை வழங்குகிறது. அதாவது இந்தப் புதிய சாதனம் பயனர் உயர்தர ஆடியோவை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கும். இதில் உள்ள அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் குரல் சேவையை வழங்கும். இது, டிராக் ஸ்கிப்பிங் மற்றும் வால்யூம் சரிசெய்தலை அனுமதிக்கிறது. ஸ்பீக்கர் அறை முழுவதும் சீரான ஆடியோவை வழங்குகிறது. சீரற்ற ஒலி விநியோகத்தை நீக்குகிறது.

சாம்சங் மியூசிக் ஃப்ரேம் வயர்லெஸ் விவரக்குறிப்புகள்

மியூசிக் ஃப்ரேம் சாம்சங்கின் கியூ-சிம்பொனி தொழில்நுட்பத்துடன் இணக்கமானது, பயனர்கள் தங்கள் தொலைக்காட்சிகளின் இருபுறமும் இரண்டு ஸ்பீக்கர்களை வைப்பதன் மூலம் ஹோம் தியேட்டர் போன்ற அனுபவத்தை அளிக்கிறது. கூடுதலாக, சாம்சங்கின் ஸ்பேஸ்ஃபிட் சவுண்ட் ப்ரோ தொழில்நுட்பமானது அறை ஒலியியலை பகுப்பாய்வு செய்கிறது. இதன் மூலமும் அதற்கேற்ப ஒலி வெளியீட்டை மாற்றியமைப்பதன் மூலமும் பயனரின் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது ஏர்ப்ளே (AirPlay) 2 உடன் வேலை செய்கிறது.
டிவி மற்றும் மியூசிக் ஃபிரேம் ஆகிய இரண்டிற்கும் ரிமோட் கண்ட்ரோல் ஸ்போர்ட்டி கனெக்ட், க்ரோம்கேஸ்ட் உடன் வருகிறது. இதுமட்டுமின்றி வைஃபை ஸ்மார்ட் கனெக்டிவிட்டி சிறந்த ஸ்மார்ட் அனுபவத்தை வழங்குகிறது. சாம்சங் மியூசிக் ஃப்ரேம் ரூ. 23,999 விலையில் உள்ளது, இப்போது இ-காமர்ஸ் தளமான அமேசான், சாம்சங் இந்தியா இணையதளம் மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகளில் வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7

சாம்சங்கின் வரவிருக்கும் கேலக்ஸி வாட்ச் 7 மற்றும் வாட்ச் அல்ட்ரா ஆகியவை தொழில்நுட்ப சந்தையில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய கடிகாரங்கள் மேம்பட்ட Exynos W1000 செயலியுடன் பொருத்தப்பட்டிருக்கும். இது பயனர்களுக்கு மிகவும் உயரிய அனுபவத்தை வழங்கும். இந்த வாட்ச்கள் ரூ.10,999ல் இருந்து தொடங்குகின்றன. எனினும், புதிய சாம்சங் கேலக்ஸி வாட்ச் 7 தொடர்பான விலை விவரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : ரெட்மீ நோட் 13 ப்ரோ விலை அதிரடி குறைப்பு; இப்படி வாங்குங்க.. இன்னும் கம்மியா கிடைக்கும்!

மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்