5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gpay : கூகுள் பே யூஸ் பண்றீங்களா? உஷார்.. பணத்தை திருடும் புது மோசடி.. போலீஸ் எச்சரிக்கை!

Google Pay Scam Alert | சமீப காலமாக கூகுள் பே செயலி மூலம் அரங்கேறிவரும் மோசடி குறித்து தமிழ்நாடு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கூகுள் பேயில் தெரியாமல் பணம் அனுபிவிட்டதாக கூறும் மோசடி நபர்கள், பணத்தை திரும்ப அனுப்புமாறு கேட்கின்றனர். அவ்வாறு பணத்தை திரும்ப அனுப்பும்போது தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

Gpay : கூகுள் பே யூஸ் பண்றீங்களா? உஷார்.. பணத்தை திருடும் புது மோசடி.. போலீஸ் எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 16 Jul 2024 13:54 PM

கூகுள் பே மோசடி: தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை இப்போது சில நொடிகளில் செய்து முடித்துவிடும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. உணவு பொருட்கள் முதல் துணிமணிகள் வரை, வீட்டிலிருந்தபடியே  அனைத்தையும் ஆன்லைனில் வாங்கிட முடிகிறது. அந்த வகையில் பண பரிவர்த்தனியும் ஒன்று. முன்பெல்லாம் வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்கும் முறை இருந்தது. பிறகு ஏடிஎம் மையங்கள் கொண்டுவரப்பட்டன. அதன் மூலம் 24 மணி நேரமும் பணம் எடுக்கும் வசதி இருந்தது. அதற்கும் ஒரு படி மேலாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பணம் எடுக்கவோ அல்லது பணம் செலுத்தவோ அலைய வேண்டிய தேவை இல்லை. இதன் காரணமாக ஏராளமான மக்கள் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

டிஜிட்டல் பேமெண்ட் முறைக்கு மாறிய பொதுமக்கள்

முன்பெல்லாம் கடைகளுக்கு சென்றால் ரூபாய் நோட்டுகளை கொடுத்து பொருட்கள் வாங்கிய காலம் மாறி அனைத்தும் டிஜிட்டம் பேமெண்டுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது 1 ரூபாயாக இருந்தாலும்  சரி, 10,000 ரூபாயாக இருந்தாலும் சரி டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் எளிதாக செய்து முடித்துவிட முடியும். இவ்வளவு எளிதான டிஜிட்டல் பேமெண்டில் பல ஆபத்துக்களும் உள்ளன. டிஜிட்டல் பேமெண்டு முறைகளை பயன்படுத்தி பல மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. அத்தகைய மோசடி ஒன்றை குறித்து தான் தற்போது காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

கூகுள் பே மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை

காவல்துறையின் அறிக்கையின்படி, கூகுள் பேயில் புதிய மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தவறுதலாக உங்கள் கூகுள் பே எண்ணிற்கு பணம் அனுப்பியதாக கூறும் மோசடி கும்பல், உங்களை பணத்தை திரும்ப அனுப்புமாறு கேட்கும். அது உங்கள் பணம் இல்லை என்பதை உணர்ந்த நீங்கள் பணத்தை திரும்ப அனுப்புவீர்கள். அவ்வாறு நீங்கள் பணத்தை அனுப்பும் பட்சத்தில், உங்களின் விவரங்கள் திருடப்பட்டு உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே விழிப்புடன் இருங்கள் என பொதுமக்களை காவல்துறை எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க : உங்கள் வாட்ஸ் அப் சாட் திருடப்படலாம்.. அதை தடுக்க இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!

அறிவுரையை கட்டாயம் பின்பற்றுங்கள்

அதுமட்டுமன்றி, உங்களுக்கு ஏதேனும் முன் பின் தெரியாத எண்ணில் இருந்து கூகுள் பேவில் பணம் வந்தால், அதை அவர்கள் திருப்பி அனுப்புமாறு கேட்கும் பட்சத்தில், அந்த நபரின் அடையாள அட்டையுடன் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறுங்கள் என காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News