5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Telegram Ban In India : டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கும் இந்தியா?.. வெளியான முக்கிய தகவல்!

Pavel Durov | மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்று டெலிகிராம். இந்த செயலி மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போலவே குழக்கள் மற்றும் தனிநபரிடம் உரையாட முடியும். தற்போது டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Telegram Ban In India : டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கும் இந்தியா?.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 27 Aug 2024 13:29 PM

டெலிகிராம் செயலி  : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்று டெலிகிராம். இந்த செயலி மூலம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போலவே குழக்கள் மற்றும் தனிநபரிடம் உரையாட முடியும். தற்போது டெலிகிராம் செயலியை உலகம் முழுவதும் சுமார் 900 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சமூக ஊடக செயலிகளில் ஒன்றகா டெலிகிராம் உள்ளது. குறிப்பாக டெலிகிராம் செயலியை பெரும்பாலானோர், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களை பதிவிரக்கம் செய்ய பயன்படுத்துகின்றனர். டெலிகிராம் செயலி மக்களிடம் இவ்வளவு பிரபலமாக உள்ள நிலையில், இந்த செயலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இந்தியாவில் தடை செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Aadhaar & PAN : வாட்ஸ்அப்பில் ஆதார் மற்றும் பான் கார்டு டவுன்லோட் பண்ணலாமா.. அட இது தெரியாம போச்சே!

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் – காரணம் என்ன?

டெலிகிராம் செயலி சி.இ.ஓ பாவெல் துரோவ் தனது பிரைவேட் ஜெட்டில் அஜர்பைஜனை நோக்கி சென்ற போது, பிரான்ஸில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டெலிகிராம் செயலி, பல்வேறு சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்த படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வந்தன. மேலும் இணையத்தில் சட்ட விரோத செயல்களை செய்வதற்கு டெலிகிராம் செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாகவும், அதனை டெலிகிராம் நிறுவனம் தடையின்றி அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதுமட்டுமன்றி பயனர்களின் தகவல் மற்றும் விவரங்களை டெலிகிராம் நிறுவனம் அரசுக்கு தெரியாமல் பாதுகாப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் தீவிரவாத இயக்கங்களுடன் துணைபோவது, போதைப் பொருள் விநியோகம், மோசடி, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை அனுமதிப்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Redmi Note 13: அதிரடி சலுகையுடன் விற்பனையாகும் ரெட்மி நோட் 13.. இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க

டெலிகிராம் செயலி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் இந்திய அரசு – அதிரடி நடவடிக்கை!

டெலிகிராம் செயலி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவற்றை குறித்து இந்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஒரு வேளை டெலிகிராம் செயலி மீதான இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக உயர் அதிகாரிகள் வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News