Android Tricks : ஆண்ட்ராய்டு பயனர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 ட்ரிக்ஸ்.. என்ன என்ன தெரியுமா? - Tamil News | These are some important 5 tricks every android users must know | TV9 Tamil

Android Tricks : ஆண்ட்ராய்டு பயனர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 ட்ரிக்ஸ்.. என்ன என்ன தெரியுமா?

Hacks of Android | ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு ஆபத்தானவையும் கூட. காரணம் ஸ்மார்ட்போன்கள் மூல ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை சுலபமாக எடுக்க முடியும். ஒரு குறுஞ்செய்தி அல்லது ஓடிபி மூலம் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் கொள்ளையடிக்கப்படும் அபாயமும் உள்ளது.

Android Tricks : ஆண்ட்ராய்டு பயனர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 ட்ரிக்ஸ்.. என்ன என்ன தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

09 Oct 2024 21:44 PM

உலகின் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த எளிதாகவும், வேலைகளை சுலபமாக்குவதாலும் பலரும் அவற்றை பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு பயனுள்ளதோ அந்த அளவிற்கு ஆபத்தானவையும் கூட. காரணம் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை சுலபமாக எடுக்க முடியும். ஒரு குறுஞ்செய்தி அல்லது ஓடிபி மூலம் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணமும் கொள்ளையடிக்கப்படும் அபாயமும் உள்ளது. இந்த நிலையில், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய 5 ட்ரிக்ஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Airtel : இனி மோசடிகள் குறித்து கவலை இல்லை.. ஏர்டெல் வழங்கும் அசத்தல் சேவை.. முற்றிலும் இலவசம்!

Wi-Fi பாஸ்வேர்டு பகிர்தல்

பெரும்பாலான மக்கள் யாரேனும் Hotspot பகிர சொன்னால் உடனடியாக தங்களின் Wi-Fi பாஸ்வேர்டை கொடுத்துவிடுகின்றனர். நெட்வொர்க் பகிர்வதற்கு உங்களது பாஸ்வேர்டை தான் பகிர வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாஸ்வேர்டை நீங்கள் QR குறியீடு மூலமாக கொடுக்கலாம். QR குறியீடு மூலம் பாஸ்வேர்டு பகிரப்படும் பட்சத்தில் உங்கள் பாஸ்வேர்டு யாருக்கும் தெரிய வராது.

QR குறியீடு மூலம் Wi-Fi பாஸ்வேர்டு பகிர்வது எப்படி?

  • முதலில் உங்கள் மொபைல் போனில் உள்ள Settings பகுதிக்கு செல்லுங்கள்.
  • அங்கு Connections என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • பிறகு Wi-Fi என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • அதனை தொடர்ந்து Current Network என்பதை கிளிக் செய்யுங்கள்.
  • பிற்கு QR Code-ஐ கிளிக் செய்து உங்கள் Wi-Fi பாஸ்வேர்டு அனுப்புங்கள்.

இதையும் படிங்க : Flipkart Utsav Sale : மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி!

மொழிப்பெயர்ப்பு

கூகுள், மொழிப்பெயர்ப்பை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மிகவும் சுலபமாக மாற்றியுள்ளது. பயனர்கள் மொழிப்பெயர்க்க நினைக்கும் வார்த்தைகளை செலக்ட் செய்து, திரையில் தோன்று Translate ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் செயலியை விட்டு வெளியே செல்லாமலே மொழிப் பெயர்த்துக்கொள்ளலாம். இதை முதல் முறை செய்யும்போது Language Pack பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Lava Agni 3 : டூயல் டிஸ்பிளே கொண்ட லாவா அக்னி 3.. இன்று முதல் விற்பனை.. சிறப்பு சலுகைகள் என்ன என்ன?

சார்ஜிங் வசதி

ஆண்ட்ராய்டு போன் மூலம் மற்ற கருவிகளை சுலபமாக சார்ஜ் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு போனை USB கேபில் மூலம் இணைக்கும் பட்சத்தில் சார்ஜ் செய்ய முடியும். இது ரிவர்ஸ் சார்ஜிங் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் ஸ்மார்ட்போன் வைரஸ்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டிருந்தால் இதனை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Oneplus 13 : விரைவில் அறிமுகமாக உள்ள ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இரண்டு வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மூலம் நீங்கள் இரண்டு வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை பயன்படுத்த முடியும். கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களை தவிர மற்ற எல்லா ஸ்மார்ட்போன்களிலும் இது சாத்தியம் ஆகும். ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு ஏற்ப இதற்கான Setting மாறுபடும். இருப்பினும் அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் இரண்டு வாட்ஸ்அப், இரண்டு இன்ஸ்டாகிராம், இரண்டு எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளை பயன்படுத்த முடியும்.

இதையும் படிங்க : Free Apple AirPod : தீபாவளி சலுகை.. இலவசமாக ஏர்பாட் வழங்கும் ஆப்பிள்.. 2 நாட்களுக்கு மட்டும் தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Developer ஆப்ஷன்களை அன்லாக் செய்யலாம்

ஆண்ட்ராய்டு போன்களில் Developer ஆப்ஷனில் பல சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். Build Members ஆப்ஷனை 7 முறை டேப் செய்யும் பட்சத்தில் அவை சுலபமாக அன்லாக் செய்யப்படும். இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ள முடியும்.

டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்னேகா...!
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
Exit mobile version