5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Google Search 2024 : ஐபிஎல் முதல் ரத்தன் டாடா வரை.. 2024-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய டாப் 10 விஷயங்கள் இவைதான்!

Top 10 Searches | கூகுள் சர்ச் இன்ஜின் பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மக்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் முதலில் கூகுளிடம் தான் கேட்கின்றனர். இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு முழுவதும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளை கூகுள் வெளியிட்டுள்ளது.

Google Search 2024 : ஐபிஎல் முதல் ரத்தன் டாடா வரை.. 2024-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய டாப் 10 விஷயங்கள் இவைதான்!
கோப்பு புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 11 Dec 2024 18:53 PM

உலக அளவில் ஏராளமான மக்கள் கூகுள் சேவையை பயன்படுத்துகின்றனர். கூகுள் நிறுவனம், கூகுள் மேப், கூகுள் டிரைவ், ப்ளேஸ்டோர் உள்ளிட்ட பல அம்சங்களை வழங்கி வரும் நிலையில், அதன் பயனர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகவே உள்ளது. உலகின் மற்ற எந்த நிறுவனத்தின் பயணர்களை விடவும் கூகுளின் பயனர்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. கூகுளில் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டாலும், கூகுளின் சர்ச் இன்ஜினை தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, கூகுள் சர்ச் இன்ஜின் பொதுமக்களின் அன்றாட வாவில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மக்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் முதலில் கூகுளிடம் தான் கேட்கின்றனர். இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு முழுவதும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முதல் 10 தலைப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Instagram : மெசேஜ் ஸ்கெடியூல் ஆப்ஷனை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

1. இந்தியன் பிரீமியர் லீக்

இந்தியன் பிரீமியர் லீக் ஒவ்வொரு மாநிலங்களை தலையிடமாக கொண்டு கிரிக்கெட் அணிகள் ஒவ்வொரு ஆண்டு களமிறங்கும் ஒரு கிரிக்கெட் போட்டியாகும். இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில் இந்தியன் பிரீமியர் லீக் முதல் இடம் பிடித்துள்ளது.

2. டி20 உலக கோப்பை

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது. இந்த வரலாற்று சாதனை இந்தியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட இரண்டாவது தலைப்பாக இது உள்ளது.

3. பாரதிய ஜனதா கட்சி

இந்தியாவில் உள்ள கட்சிகளில் பெரும் பலமும், பெரும்பான்மை மக்கள் செல்வாக்கை கொண்ட கட்சியாகவும் பாஜக உள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களை பாஜக அரசு ஆட்சி செய்யும் நிலையில், 2024-ல் அதிகம் தேடப்பட்ட தலைப்பில் பாஜக மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

4. தேர்தல் முடிவுகள் 2024

2024-ல் மாபெரும் நிகழ்வாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது, நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் தேர்தல் இது என்பதால் ஒட்டுமொத்த நாட்டின் கவனமும் தேர்தல் முடிவுகளின் மீது இருந்தது. இந்த தேர்தலில் மோடி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நிலையில், தேர்தல் முடிவுகள் 2024 என்ற தலைப்பு 4வது இடத்தில் உள்ளது.

5. ஒலிம்பிக் 2024

பாரிஸில் 2024 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர், வீராங்களைகள் பெங்கேற்றனர். இந்திய வீரர்களும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை பெற்றனர். இந்த நிலையில், ஒலிம்பிக் 2024 என்ற தலைப்பு 5வது இடம் பிடித்துள்ளது.

6. அதிக வெப்பம்

2024 ஆம் ஆண்டு அதிக அளவு மழை மற்றும் வெயிலை சந்தித்த ஆண்டாக உள்ளது. கோடைக்காலத்தில் கடுமையான வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில் இது 6வது இடம் பிடித்துள்ளது.

7. ரத்தன் டாடா

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒருவரான ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவு, இந்திய மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், 2024 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில் ரத்தன் டாடாவின் பெயர் 7வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

8. இந்திய தேசிய காங்கிரஸ்

இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ள நிலையில், பாஜகவை எதிர்க்கும் பலம் கொண்ட கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பல இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், அது கூகுளில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளில் 8வது இடத்தில் உள்ளது.

9. ப்ரோ கபடி லீக்

2024-ல் இந்தியாவில் ப்ரோ கபடி லீக் 11வது சீசன் நடைபெற்றது. தற்போது இந்த தலைப்பு தான் கூகுள் வெளியிட்டுள்ள பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. பொதுவாக கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் அதிகம் தேடபப்டும் பட்சத்தில் ப்ரோ கபடி லீக் இடம்பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

10. இந்தியன் சூப்பர் லீக்

இந்தியர் பிரீமியர் லீக் போன்று இந்தியன் சூப்பர் லீக்கும் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு விளையாட்டு போட்டியாகும். மாறாக, கிரிக்கெட் இல்லாமல் இந்தியன் சூப்பர் லீக்கில் கால்பந்து அணிகள் களமிறங்கும். இந்த தலைப்பு தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட 10வது தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News