ஸ்மார்ட்போன் உதவியால் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.. UNGA தலைவர் புகழாரம்!
UNGA President | இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியின் மூலம், கிராமப்புறங்களில் கூட வங்கி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் உதவியால் 800 மில்லியன், அதாவது 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரதமர் டென்னி பிரான்சிஸ் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
டிஜிட்டல் இந்தியா : இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியின் மூலம், கிராமப்புறங்களில் கூட வங்கி சேவைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் உதவியால் 800 மில்லியன், அதாவது 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். முன்பு, இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் வங்கி சேவைகள் எதுவும் இல்லாமல் இருந்ததாகவும், ஆனால் தற்போது ஸ்மார்ட்போன் உதவியில், இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் வங்கி சேவை பரந்து விரிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஸ்மார்ட்போனின் உதவியால் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்”
இது குறித்து அவர் பேசியதாவது, டிஜிட்டல் மயமாக்கப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தியா கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில், ஸ்மார்ட்போனின் உதவியால் 80 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பசி இன்மை தலைப்பில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Top 10 Countries : உலகில் பொருளாதாரத்தில் சிறந்த டாப் 5 நாடுகள் இவை தான்.. இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
“எந்த தெற்கத்திய நாடுகளாலும் இந்தியாவின் சாதனையை முறியடிக்க முடியாது”
இந்தியாவில் உள்ள இன்டர்நெட் வசதியால், ஸ்மார்ட்போன்கள் மூலம் மக்கள் வங்கி சேவைகளை பயனப்டுத்த முடிகிறது. உலகின் வேறு எந்த தெற்கத்திய நாடுகளாலும் இந்தியாவின் இந்த சாதனையை முறியடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். வங்கிகள் மற்றும் வங்கிகளின் செயல்பாடு குறித்து தெரியாத விவசாயிகள், தற்போது வீட்டில் இருந்தபடியே தங்களது தொழிலுக்கு தேவையான ஆன்லைன் பண பரிவர்த்தனையை மேர்கொள்கின்றனர் என்று தெரிவித்தார். அவர்கள் தங்களது கட்டணங்களை ஸ்மார்ட்போன் மூலம் செலுத்துவது மட்டுமன்றி, தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கான பணத்தையும் ஆன்லைன் பேமெண்ட் மூலம் பெற்றுக்கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : New Rules : கேஸ் சிலிண்டர் முதல் ஃபாஸ்டேக் வரை.. ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வந்த புதிய நடைமுறைகள்!
பிரதமர் நரேந்திர மோடி இந்தியர்களை டிஜிட்டல் நடைமுறைகளை பழகிக்கொள்ள கேட்டுக்கொண்டார். அதன்படி, ஜன் தன், ஆதார் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றால் அலட்சக்கணக்கான மக்கள் வங்கி கணக்குகளை தொடங்கினர். அந்த வங்கி கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் மத்திய அரசின் சேவைகள் மற்றும் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.