5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

BSNL Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் லோகோ.. இந்தியா வார்த்தை நீக்கம்!

இந்த புதிய லோகோ அறிமுகம் செய்யும் விழா டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மத்திய அமைச்சர்  சந்திரசேகர் பெம்மாசை,  தொலைத்தொடர்பு துறை செயலாளர் நீரஜ் மெட்டல் ஐஏஎஸ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

BSNL Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் லோகோ.. இந்தியா வார்த்தை நீக்கம்!
பழைய லோகோ – புதிய லோகோ
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 22 Oct 2024 16:04 PM

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிக்கம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி காவி நிற உலக உருண்டையில் இந்திய வரைபடம் இருப்பது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக எந்தவித வரைபடமும் இல்லாமல் கிரே கலரில் உலக உருண்டை இருந்தது. காவி நிறத்திற்கு பிஎஸ்என்எல் லோகோ மாற்றப்பட்டுள்ள நிலையில் இது சமூக வலைதளங்களில் கடும் பேசுப்பொருளாக மாறி உள்ளது. மேலும் முன்னதாக கனெக்டிங் இந்தியா என்ற வார்த்தையில் இந்தியா நீக்கப்பட்டு கனெக்டிங் பாரத் எனவும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒவ்வொரு திட்டத்திலும் காவி நிறத்தை சேர்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் லோகோவும் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த புதிய லோகோ அறிமுகம் செய்யும் விழா டெல்லியில் உள்ள பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மத்திய அமைச்சர்  சந்திரசேகர் பெம்மாசை,  தொலைத்தொடர்பு துறை செயலாளர் நீரஜ் மெட்டல் ஐஏஎஸ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Also Read: Share Market : கடும் சரிவை சந்தித்த பங்குச்சந்தை.. ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!

முன்னதாக வந்தே பாரத் ரயில்கள் நீல நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பொதுமககளிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  அடுத்த சில மாதங்களில் மற்ற வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட்ட வந்தே வாரத் ரயில்கள் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அதேபோல் மத்திய அரசின் தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷனின் லோகோவும் ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் சேவைகள் 

வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு, மலிவு மற்றும் நம்பகத்தன்மை ஆகிய மூன்றையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 7 புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளனர்.

  •  பிஎஸ்என்எல் இன் ஸ்பேம் இல்லாத நெட்வொர்க்

ஃபிஷிங் தொழில்நுட்பம் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் மோசடி செய்திகள் வாடிக்கையாளர்களை சென்றடைவதை தடுக்கும். இது போன்ற செய்திகள் குறித்து வாடிக்கையாளர்களை எச்சரிக்கும்.

  •   பிஎஸ்என்எல் தேசிய அளவிலான Wi-Fi ரோமிங்

பிஎஸ்என்எல் இன் முதல் FTTH அடிப்படையிலான தடையற்ற Wi-Fi ரோமிங் சேவையுடன், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பிஎஸ்என்எல்  ஹாட்ஸ்பாட்களில் அதிவேக இணையத்தை அணுக முடியும். இதனால் அவர்களின் இணைய கட்டணம் குறையும்.

  •  பிஎஸ்என்எல் ஐஎஃப்டிவி

இந்தியாவிற்கு முதல் முறையாக ஃபைபர் அடிப்படையிலான இன்டர்நெட் டிவி சேவை அளிக்கப்படுகிறது. FTH நெட்வொர்க் மூலம் 500+ நேரலை சேனல்களைப் பார்க்கவும், டிவிக்கு பணம் செலுத்தவும் முடியும்.

Also Read:Commonwealth Games 2026: இந்தியாவுக்கு பெரும் அடி! காமன்வெல்த் போட்டியில் இருந்து ஹாக்கி, கிரிக்கெட் நீக்கம்..!

  •  எந்த நேரமும் சிம் (ATS) அப்டேட்

ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பம் மூலம் சிம் தொடர்பான அப்டேட்டுகளை வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் மேற்கொள்ளலாம். இதன்மூலம் புதிய சிம்களை வாங்க, மேம்படுத்த, போர்ட் செய்ய அல்லது மாற்ற விண்ணப்பிக்கலாம்.

  • சாதனத்திற்கு நேரடி சேவை

இந்தியாவின் முதல் நேரடி சாதனம் (D2D) இணைப்பு. செயற்கைக்கோள் மற்றும் தரை மொபைல் நெட்வொர்க்குகளை ஒருங்கிணைத்து இணைப்பை வழங்குகிறது.

  •  பொது பாதுகாப்பு மற்றும் பேரிடர் தகவல்கள்

BSNL இன் அளவிடக்கூடிய, பாதுகாப்பான நெட்வொர்க், பேரிடர் பதிலின் போது அரசு மற்றும் நிவாரண நிறுவனங்களுக்கு இந்தியாவின் முதல் உத்தரவாதமான தகவல்தொடர்புகளை வழங்கும். அவசர காலங்களில் கவரேஜை அதிகரிக்க ட்ரோன் அடிப்படையிலான மற்றும் பலூன் அடிப்படையிலான அமைப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  •  சுரங்கங்களில் முதல் தனியார் 5G

பிஎஸ்என்எல் ஆனது C-DAC உடன் இணைந்து சுரங்க நடவடிக்கைகளுக்கு நம்பகமான, வேகமான 5G இணைப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்த சேவையானது நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் பெரிய திறந்தவெளி சுரங்கங்களில் மேம்பட்ட AI மற்றும் IoT உதவியுடன் அதிவேக குறைந்த தாமதமான சேவைகளை வழங்கும்.

Latest News