iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இப்படி ஒரு பிரச்னையா?.. குழம்பும் பயனர்கள்!
iPhone Issue | உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகமானது. ஆதாவது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் 16, ஆப்பிள் 16 பிளஸ், ஆப்பிள் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதில் சில சிக்கல்களை சந்திப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் வருகைக்காக காத்திருந்த பலரும், விற்பனையின் முதல் நாளே ஐபோனை வாங்கியுள்ளனர். இன்றும் ஐபோன் ஷோ ரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் ஏற்பட்டுள்ள பிரச்னை என்ன, அது குறித்து பயனர்கள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க வரிசையில் நிற்க தேவை இல்லை.. வெறும் 20 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனங்கள்!
இட்ஸ் க்ளோடைம் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் 16 சீரீஸ்
உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகமானது. ஆதாவது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் 16, ஆப்பிள் 16 பிளஸ், ஆப்பிள் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் அப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ப்ரீ புக்கிங் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் விற்பனை தொடங்கியது.
இதையும் படிங்க : iPhone 13 : ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை.. வெறும் ரூ.40,000 வழங்கும் அமேசான்!
விறுவிறுப்பான நடைபெற்று வரும் விற்பனை
ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை தொடங்கியது முதலே, ஸ்மார்ட்போன்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் ஏராளமான பொதுமக்கள் ஸ்மார்ட்போன்களை வாங்கி வருகின்றனர். அதுமட்டுமன்றி ஆப்பிள் ஷோ ரூம்களின் வாசல் வரை வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்த நிலையில் தான், இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க : Chess Olympiad 2024: ஒரே நாளில் மூன்று தங்கம்.. செஸ் ஒலிம்பியாட்டில் சாம்பியன் பட்டத்தை அள்ளிய இந்தியா!
ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் குறித்து எழுந்த குற்றச்சாட்டுகள்
ஆப்பிள் 16 ஸ்மார்ட்போன்களில் ஹேங் மற்றும் லேக் பிரச்னைகள் உள்ளதாக பயனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது ஒரு இடத்தை தொட்டால் மற்றொரு இடத்தில் செயல்படுவது, முழு திரையும் செயல்படாமல் இருப்பது உள்ளிட்ட பல் பிரச்னைகளை சந்திப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக ஒரு பயனர் பதிவிட்டதில், கேமரா பட்டனுக்கு அருகில் உள்ள பட்டனை அழுத்தினால் முழு திரையும் செயல்படாமல் அப்படியே நின்று விடுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இதேபோல பலர், ஐபோன் 16 ஸ்மார்ட்போன்களின் செயல் திறன் வேகமாக இல்லை என்றும், சிரமங்களை சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : IPL 2025 Retention: தோனிக்காக முக்கிய வீரர்களை வெளியேற்ற திட்டமா? பிசிசிஐ முடிவுக்காக காத்திருக்கும் சிஎஸ்கே!
உங்கள் ஐபோனில் இந்த பிரச்னை உள்ளதா என்பதை பரிசோதியுங்கள்
உங்கள் ஐபோனில் வளது பக்கத்தில் கீழே இருக்கும் பட்டனுக்கு அருகில் உள்ள ஸ்கிரீனை தட்டுங்கள், பிறகு உங்களது இடது கையால் ஸ்க்ரீனை ஸ்வைப் செய்யுங்கள். உங்கள் ஸ்மார்ட்போனில் சிக்கல் உள்ளது என்றால் உங்களால் டேப் மற்றும் ஸ்வைப் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயல்முறையை பயன்படுத்தி உங்கள் ஐபோனில் இதேபோன்ற சிக்கல் உள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை தொடர்ந்து அனைவரும் ஆவலாக ஐபோன்களை வாங்கி வரும் நிலையில், இந்த புதிய சிக்கல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.