Mobile Listening : உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் மொபைல் போன்கள்.. உறுதி செய்த நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்!
Shocking News | பொழுபோக்கு மற்றும் உடனடி தகவல்களுக்காக பொதுமக்கள் பல மணி நேரம் சமூக வளைத்தங்களில் தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர். இதேபோல கடைகளில் ஏறி இறங்கி ஷாப்பிங் செய்வதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
மொபைல் போன்கள் : சமீப காலமாகவே மக்கள் மத்தியில் மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக சமூக ஊடகங்களின் பயன்பாடும், ஆன்லைன் ஷாப்பிங்கும் அதிகரித்துள்ளது. பொழுபோக்கு மற்றும் உடனடி தகவல்களுக்காக பொதுமக்கள் பல மணி நேரம் சமூக வளைத்தங்களில் தங்களின் நேரத்தை செலவிடுகின்றனர். இதேபோல கடைகளில் ஏறி இறங்கி ஷாப்பிங் செய்வதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. தற்போது அதனை உண்மையாக்கும் விதமாக மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க : Scam : OLX-ல் QR கோடு மூலம் ரூ.2 லட்சத்தை பணத்தை இழந்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்!
மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கின்றனவா?
பொதுவாக மொபைல் போன்கள் நாம் எதை பார்க்கிறோமோ அதற்கு ஏற்ற தலைப்புகளில் தகவல்களை காட்டும் அம்சம் கொண்டவை. அதாவது சமூக வலைத்தளங்களில் சமையல் வீடியோக்களை அதிகம் பார்த்தால் அது தொடர்ந்து அதிக சமையல் வீடியோக்களை காட்டும். இதேபோல சினிமா, விளையாட்டு என நாம் எந்த வகையான தகவல்களை தேடுகிறோமோ தொடர்ந்து பார்கிறோமோ அதையே காட்டும். அது அல்காரிதத்தின் அடிப்படையில் இயங்குகிறது. ஆனால் மொபைல் போனால் எப்படி நாம் பேசுவதை தெரிந்துக்கொள்ள முடிகிறது. உதாரணமாக இரண்டு நண்பர்கள் ஹூ வாங்குது குறித்து பேசினால், சில நிமிடங்கள் கழித்து அவர்களின் மொபைல் போன்களில் உள்ள சமூல வலைத்தளங்களில் ஷூ குறித்த விளம்பரங்கள் வரும். இதனால் மொபைல் போன் மூலம் ஒட்டுக் கேட்கப்படலாம் என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதிர்ச்சி தகவலை சொன்ன மார்க்கெட்டிங் நிறுவனம்
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள Cox Media Group தனது ஆக்டிவ் லிசனிங் தொழில்நுட்பம் மூலம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பயனர்களின் உரையாடல்களில் இருந்து தகவல்களை எடுப்பதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி அவர்களின் உரையாடலை கேட்டு அவர்களுக்கு என்ன வேண்டும், எத்தகைய பொருட்களை வாங்க விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளது. போன் கால் உரைடாடல்கள் மட்டுமன்றி ஆன்லைன் உரையாடல்களில் இருந்தும் தகவல்கள் சேகரிக்கப்படுவதாக அது தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : Google AI : இருமும் சத்தத்தை வைத்தே என்ன நோய் என சொல்லும் ஏஐ.. கூகுளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
விவகாரத்தை கையில் எடுத்த மெட்டா மற்றும் அமேசான் நிறுவனங்கள்
இந்த நிறுவனம் அமேசான், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாக உள்ள நிலையில், மெட்டா மற்றும் அமேசான் நிறுவங்கள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. அந்த நிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் சட்ட விதிகள் குறித்து விரிவாக ஆராய்ச்சி நடத்த உள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது. பயனர்களுக்கு தெரியாமல் அவர்களிடம் இருந்து விவரங்களை சேகரித்து வியாபாரம் செய்வது அவர்களின் நம்பகத்தன்மையை பாதிக்கும் செயலாகும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.