5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

விரைவில் அறிமுகமாகவுள்ள Vivo 40 and Vivo 40 Pro.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

விரைவில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள் : விவோ வி30 சீரிஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வி40 மற்றும் வி40 ப்ரோ மொபைல்களை அறிமுகப்படுத்த விவோ திட்டமிட்டுள்ளது. இது குறித்து 91 மொபைல் வெளியிட்டுள்ள தகவலின் படி விவோ 40 சீரிஸ் 5,500mAh பேட்டரி அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆக்ஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் மிகவும் மெல்லிய தோற்றம் கொண்டதாக இருக்கும். […]

விரைவில் அறிமுகமாகவுள்ள Vivo 40 and Vivo 40 Pro.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 23 Jul 2024 15:29 PM

விரைவில் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள் : விவோ வி30 சீரிஸ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து வி40 மற்றும் வி40 ப்ரோ மொபைல்களை அறிமுகப்படுத்த விவோ திட்டமிட்டுள்ளது. இது குறித்து 91 மொபைல் வெளியிட்டுள்ள தகவலின் படி விவோ 40 சீரிஸ் 5,500mAh பேட்டரி அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆக்ஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மொபைல் மிகவும் மெல்லிய தோற்றம் கொண்டதாக இருக்கும். இந்த இரண்டு மாடல்களும் IP68 ரேட்டிங் மற்றும் தூசி மற்றும் தண்ணீர் பாதுக்காப்புடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் வளைந்த 3டி டிஸ்பிளே இடம் பெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த மொபைல் போனின் கேமரா ஜெய்ஸ் ஆப்டிஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது மல்டி ஃபோகல் படங்களை எடுக்க உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஐரோப்பிய மாடல் ஸ்மார்ட் போனை போலவே இதும் ஒரே அம்சங்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் சிறை தண்டனை.. ரூ.2,00,000 அபராதம்.. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

விவோ வி40 (Vivo V40) சிறப்பு அம்சங்கள்

ஐரோப்பிய சந்தையில், விவோ வி40 ஸ்மார்ட்போன் 6.78 வளைந்த 3டி AMOLED டிஸ்பிளே கொண்டதாக உள்ளது. இதில் 4,500 நிட் வரை பிரைட்னஸ் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 SoC மற்றும் ஆட்ரெனோ 720 GPU அம்சங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில்  LPDDR4X RAM 12ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் அம்சமும் உள்ளது.

இதையும் படிங்க : BSNL Recharge Plan: உங்க கிட்ட ரூ.100 இருக்கா? ஒரு மாதத்திற்கு பிரச்னை இல்ல… பிஎஸ்என்எல் வழங்கும் செம்ம திட்டம்!

50MP OIS உடன் கூடிய டுயல் கேமரா அம்சம் இதில் உள்ளது. அதுமட்டுமனறி செல்ஃபிக்கு 50MP அல்ட்ரா வைட் லென்சும் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல முன்பக்க கேமராவுக்கும் 50MP கொடுக்கப்பட்டுள்ளாது. 5,500mAh பேட்டரி அம்சத்தை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் மிக வேகமாக சார்ஜ் ஆகும் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 2 சிம் கார்டுகள், wifi, NFC மற்றும் GPS அம்சங்களும் உள்ளன.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் செயல்பாட்டு திறன் குறித்து விரிவான தகவல்கள் வெளியாகியிருந்தாலும் இதன் விலை குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனவே இந்த ஸ்மார்ட் போன் என்ன விலையில் விற்பனை செய்யப்படும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest News