வாட்ஸ்அப் சேனலில் ஸ்கேனிங் வசதி.. பயன்படுத்துவது எப்படி? யார் யாருக்கு கிடைக்கும்?

WhatsApp QR code: வாட்ஸ்அப் சேனலில் ஸ்கேனிங் புதிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், பயனர்கள் க்யூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து சேனல்களைப் பார்க்கலாம். இதில், சேரவும் உதவும் புதிய வழியை வாட்ஸ்அப் ஆராய்ந்து வருகிறது.

வாட்ஸ்அப் சேனலில் ஸ்கேனிங் வசதி.. பயன்படுத்துவது எப்படி? யார் யாருக்கு கிடைக்கும்?

வாட்ஸ்அப் ஸ்கேனிங் வசதி

Published: 

01 Dec 2024 14:03 PM

வாட்ஸ்அப் சேனல் க்யூ.ஆர் கோடு: உலகில் உள்ள பெரும்பான்மை மக்களின் சமூக தொடர்பு செயலியான வாட்ஸ்அப், பிளாட்ஃபார்மில் சேனல்களைப் பார்க்கவும் சேரவும் க்யூ.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்யும் புதிய வழியை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. இது, வரவிருக்கும் செயல்பாடு பயனர்கள் புதிய சேனல்களைக் கண்டறிந்து பின்தொடர்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, வாபீட்டாஇன்ஃபோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இரண்டிற்கும் புதிய அம்சம் தற்போது கிடைக்கிறது. கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது போல், ஃபோனின் கேமராவைப் பயன்படுத்தி க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வது பயனர்களை சேனலுக்குத் திருப்பிவிடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த தளங்களில் கிடைக்கும்?

இந்தப் புதிய அணுகுமுறையில் வாட்ஸ்அப் சேனலுக்கான க்யூ.ஆர் குறியீட்டை அணுக, பயனர்கள் சேனலுக்குச் செல்ல வேண்டும். உண்மையில் இந்த முறை மிகவும் எளிதானது.
குறிப்பாக, வணிக உரிமையாளர்களுக்கு, வணிக அட்டைகள், சுவரொட்டிகள் மற்றும் ஃபிளையர்கள் போன்றவற்றில் க்யூ.ஆர். குறியீட்டை அச்சிட முடியும் என்பதால், இது இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நாள் குறித்த ஜியோமி.. ரெட் மீ நோட் 14 சீரிஸ் எப்போது?

எனினும், தற்போது வாட்ஸ்அப்பில் உள்ள பெரும்பாலான அம்சங்களைப் போலவே, இது எளிதானதா? என தெளிவாகத் தெரியவில்லை.
எனவே இது உங்கள் சாதனத்தில் கிடைக்கும் வரை நீங்கள் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

எப்படி செயல்படும்?

மேலும் தற்போது, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்கான அதன் சமீபத்திய பீட்டா அப்டேட்டில் (பதிப்பு 2.24.25.7) ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் வாட்ஸ்அப் சேனல்களை க்யூ.ஆர். குறியீடுகள் மூலம் எளிதாகப் பகிரவும் பின்பற்றவும் அனுமதிக்கிறது.
இது, இணைப்புகளை பகிர்வதற்குப் பதிலாக ஒரு குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் சேனல்களைக் கண்டறிந்து சேர்வதை இந்தப் புதுப்பிப்பு மிகவும் வசதியாக்குகிறது.

இந்த அம்சத்தின் மூலம், சேனல் உரிமையாளர்கள் இப்போது தங்கள் சேனலுக்கான தனித்துவமான க்யூ.ஆர் குறியீட்டை உருவாக்க முடியும்.
அதன்பின்னர், அவர்கள் அதை டிஜிட்டல் ரீதியாக பகிர்ந்து கொள்ளலாம். அதாவது, செய்திகள், ஃபிளையர்கள், வணிக அட்டைகள், சுவரொட்டிகள் மற்றும் தயாரிப்பு பேக்கேஜிங் மூலமாக பகிர்ந்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மாணவர் டூ முதியவர் வரை.. பல கோடிகள் இழப்பு.. ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’யில் தப்பிப்பது எப்படி?

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..