Social Media Account : ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது சமூக வலைதள கணக்குகள் என்ன ஆகும் தெரியுமா?
Instagram and Facebook | தற்போதைய கால சூழலில் மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மிக அதிகமாக காணப்படுகிறது. உடனடி தகவல் பரிமாற்றம், செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன.
சமீப காலமாகவே மக்கள் இடையே ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது ஒவ்வொரு தனிநபர்களும் தங்களுக்கென தனி சமூக ஊடக கணக்குகளை வைத்திருக்கின்றனர். அதில் அவர்களது புகப்படங்கள், குடும்பம், தொழில் மற்று கருத்துக்கள் உள்ளிடவற்றை பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு சமூக ஊடக கணக்குகள் ஒருவரின் அடையாளமாக மாறிவிடும் நிலையில், அந்த நபர் உயிரிழந்துவிட்டால் அந்த கணக்குகள் என்ன ஆகும் என்ற கேள்வி எழும். இந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துவிட்டால் அவரது சமூக ஊடக கணக்குகள் இயங்குமா அவற்றுக்கு என்ன ஆகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Gmail Scam : ஜிமெயில் பயனர்களை குறிவைக்கும் புதிய மோசடி.. எச்சரிக்கும் அமெரிக்க நிறுவனம்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு
தற்போதைய கால சூழலில் மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு மிக அதிகமாக காணப்படுகிறது. உடனடி தகவல் பரிமாற்றம், செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே சமூக வலைத்தளங்கள் மாறிவிட்டன. பொதுமக்களும் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களுக்கென தனி கணக்குகளை தொடங்கி தங்களது புகைப்படங்கள், குடும்பம், வேலை, அரசியல், சினிமா என தங்களுக்கு பிடித்த விஷயங்களை பகிர்கின்றனர். இவ்வாறு பலரின் தினசரி வாழ்வின் முக்கியமான அங்கமாக உள்ள சமூக ஊடக கணக்குகள் அந்த நபர் இறந்துவிட்டால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா?
இதையும் படிங்க : WhatsApp Feature : இனி வாட்ஸ்அப்பிலும் “Chat Theme” செட் செய்யலாம்.. விரைவில் அறிமுகம்!
இறந்தவரின் கணக்கை யாரும் பராமரிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்?
ஒருவர் இறந்த பிறகு அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் கணக்குகளை அவரது குடும்ப உருப்பினர்கள் தொடர்ந்து பயன்படுத்த விரும்பவில்லை என்றால் இன்ஸ்டாகிராம் அந்த கணக்கின் கட்டுப்பாட்டை முடக்கிவிடும். அவ்வாறு செய்வதன் மூலம் அந்த கணக்கை யாராலும் பயன்படுத்த முடியாது. மற்றபடி, அந்த கணக்கில் இருக்கும் புகைப்படங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், சுய விவரங்களை பார்க்கலாம், அந்த புகைப்படங்களை லைக் செய்யலாம்.
இதையும் படிங்க : Jio Recharge : அசத்தல் அம்சங்களுடன் 2 புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ!
மரபு தொடர்புகளை பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கில் நீங்கள் உங்கள் மரபு தொடர்புகளை பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் மரணத்திற்கு பிறகும், உங்களது கணக்கை நிர்வகிக்க உதவி செய்யும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு நபர் இறந்த பிறகும் அவரது சமூக வலைதள கணக்கில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விவரங்களை பார்க்க முடியும். ஆனால், அந்த கணக்கை யாராலும் நிர்வகிக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். அவர் இறந்து சில ஆண்டுகள் கடந்த பின்பும் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு இன்னும் பயன்பாட்டில் உள்ளது.
View this post on Instagram
இந்த நிலையில், பெரிய பிரபலங்கள் யாரேனும் இறந்துவிடால் இன்ஸ்டாகிராம் இத்தகைய வசதிகளை செய்யும். ஆனால் சாதாரன பயனர்கள் உயிரிழந்துவிட்டால் அவர்களது கணக்குகள் என்ன ஆகும் என்ற கேள்வி எழலாம். நீங்கள் சாதரன நபராக இருந்தாலும் உங்கள் கணக்கை பாதுகாக்கும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் வழங்குகிறது. யாரேனும் தனது இறப்பிற்கு பிறகு இன்ஸ்டாகிராம் கணக்கை பாதுகாக்க விரும்பும் பட்சத்தில், அவரது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும் இறந்த நபரின் இறப்பு சான்றிதழை இன்ஸ்டாகிராமுக்கு அனுப்பி கோரிக்கை வைக்கும்பட்சத்தில் அவர்களது கணக்கும் பாதுகாக்கப்படும்.