WhatsApp : வாய்ஸ் நோட் “Transcription” அம்சத்தை அறிவித்த வாட்ஸ்அப்.. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன? - Tamil News | WhatsApp announced voice note transcription which makes users to have unbreakable communication | TV9 Tamil

WhatsApp : வாய்ஸ் நோட் “Transcription” அம்சத்தை அறிவித்த வாட்ஸ்அப்.. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன?

Published: 

25 Nov 2024 01:35 AM

Transcribe | வாட்ஸ்அப் தனது பயனர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், வாய்ஸ் நோட்களை குறுஞ்செய்தியாக்கும் ஒரு புதிய மற்றும் சிறந்த அம்சத்தை அறிவித்துள்ளது.

1 / 5மெட்டா

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் தனது பயனர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், வாய்ஸ் நோட்களை டிரான்ஸ்கிரைப் செய்யும் புதிய அம்சத்தை அறிவித்துள்ளது.

2 / 5

வாய்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் தடையற்ற உரையாடல்களை நிகழ்த்த முடியும் எனவும் கூறப்படுகிறது. 

3 / 5

வாட்ஸ்அப்பின் இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் முதலில் Settings-க்கு செல்ல வேண்டும். அதில் Chat என்பதை கிளிக் செய்து Voice Message Transcripts என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

4 / 5

இவ்வாறு செய்வதன் மூலம் பயனர்களின் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் நோட் டிரான்ஸ்கிரைப் அம்சம் On செய்யப்படும். 

5 / 5

இதன் பிறகு பயனர்களின் செயலிக்கு வரும் வாய் நோட்களை தொடர்ந்து அழுத்தினால் "Transcribe" என்று தோன்றும். அதை கிளிக் செய்தால், செயலிக்கு வந்த வாய்ஸ் நோட் குறுஞ்செய்தியாக மாறிவிடும். 

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!