5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Whatsapp : AI முதல் VR வரை.. வீடியோ காலில் இத்தனை சிறப்பு அம்சங்களா? அசத்தும் வாட்ஸ்அப்!

New Update | வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். தங்களின் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்டுகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்ன அப்டேட், அதன் சிறப்பு அம்சம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

Whatsapp : AI முதல் VR வரை.. வீடியோ காலில் இத்தனை சிறப்பு அம்சங்களா? அசத்தும் வாட்ஸ்அப்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 27 Aug 2024 11:30 AM

வாட்ஸஅப் வீடியோ கால் அப்டேட் : சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றன. மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். தங்களின் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்டுகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்ன அப்டேட், அதன் சிறப்பு அம்சம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Whatsapp Update : வாட்ஸ்அப்பின் அசத்தலான புதிய அம்சம் .. இனி நோட் பண்ண வேண்டிய அவசியமில்லை!

வாட்ஸ்அப்பின் புதிய 3 முக்கிய அம்சங்கள்

வாட்ஸ்அப் நிறுவனம் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்து வீடியோ கால் அழைப்புகளில் AR ஃபில்டர்ஸ் மற்றும் எஃபக்ட்ஸ்களை சேர்ப்பதன் மூலம் வீடியோ கால் பேசும் அனுபவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளது. இதன் மூலம் மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் AR Filter and Effects, Background Blurring Effects, Low Light and Touch Up உள்ளிட்ட 3 முக்கிய அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

இதையும் படிங்க : ரியல்மி முதல் ஒன்பிளஸ் வரை .. ஆகஸ்ட் மாதத்தில் விற்பனையாகும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்க!

வாட்ஸ்அப்பின் இந்த 3 புதிய அம்சங்களின் சிறப்புகள் என்ன என்ன?

வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் தடையின்றி வீடியோ கால் பேச முடியும். அதாவது, நீங்கள் வெளியே எங்காவது சென்றிருந்தால், உங்களுக்கு பின்னால் தெரியும் இடத்தை பிளர் செய்துவிட்டு வீடியோ கால் பேசலாம். இதேபோல உங்கள் முகம் சோர்வாகவோ, கலையின்றி இருந்தாலோ இந்த புதிய அம்சம் மூலம் அவற்றை சரி செய்து கொள்ளலாம். கடந்த ஜூலை மாதம் முதல் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த 3 புதிய சேவைகளும், விரைவில் ஐ போன் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஆன்லைன் மீட்டிங்குகளுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக செயலிகளில் மட்டுமே இந்த அம்சங்கள் இருந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பின் இந்த புதிய அறிமுகத்தின் காரணமாக அலுவலக மீட்டிங்களுக்கு தனியாக செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படாது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Latest News