WhatsApp : வாட்ஸ்அப்பில் தொடர்புக்கொள்ள இனி மொபைல் எண் தேவையில்லை.. விரைவில் புதிய அம்சம் அறிமுகம்! - Tamil News | WhatsApp is likely to introduce username to add additional layer of security | TV9 Tamil

WhatsApp : வாட்ஸ்அப்பில் தொடர்புக்கொள்ள இனி மொபைல் எண் தேவையில்லை.. விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

Published: 

25 Oct 2024 19:31 PM

New Update | வாட்ஸ்அப் செயலியை பொருத்தவரை ஒருவரை தொடர்புக்கொள்ள வேண்டும் என்றால் அவரது மொபைல் எண் கட்டாயம். மொபைல் எண் இருந்தால் மட்டுமே ஒருவரை மற்றொருவர் தொடர்புக்கொள்ள முடியும். 

1 / 6மெட்டா

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு ஏராளமான பயனர்கள் உள்ளனர். இதற்கு காரணம் வாட்ஸ்அப்பில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் தான்.

2 / 6

இந்த நிலையில் தனது பாதுகாப்பு அம்சங்களையும் மேலும் பலப்படுத்தும் விதமாக வாட்ஸ்அப் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

3 / 6

வாட்ஸ்அப் செயலியை பொருத்தவரை ஒருவரை தொடர்புக்கொள்ள வேண்டும் என்றால் அவரது மொபைல் எண் கட்டாயம். மொபைல் எண் இருந்தால் மட்டுமே ஒருவரை மற்றொருவர் தொடர்புக்கொள்ள முடியும். 

4 / 6

ஆனால் அவ்வாறு மொபைல் எண்களை பரிமாறிக்கொள்வது பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் வாட்ஸ்அப் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

5 / 6

அதாவது வாட்ஸ்அப்பில் மொபைல் எண்ணை பரிமாறிக்கொள்வதற்கு பதிலான Username வழங்க உள்ளது. இதன் மூலம் யாருக்கும் மொபைல் எண்ணை வழங்க வேண்டிய அவசியமில்லை. 

6 / 6

வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த புதிய அம்சத்தால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. வாட்ஸ்அப்பில் அடிக்கடி அதிக நபர்களை தொடர்புக்கொள்ளும் பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.  

வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்!
ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி - பிளிப்கார்ட் அதிரடி!
நீல நிற புடவையில் கலக்கும் ஜான்வியின் போட்டோஸ்
பருவ வயது குழந்தைகளிடம் பெற்றோர் பேசவேண்டிய முக்கிய விஷயங்கள்!