5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Whatsapp : இனி புகைப்படங்கள் , வீடியோக்களை ஷேர் செய்ய நெட்வொர்க் தேவையில்லை.. வாட்ஸ்அப்பின் அசத்தல் அம்சம்!

New Update | இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் , விரைவில் ஐபோன்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. டெஸ்ட் ஃபைட்-ல் உள்ள IOS-க்கான சமீபத்திய சமீபத்திய பீட்டா வெர்ஷனில் இந்த "Nearby Share" அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்குமெண்டுகளை அருகில் உள்ளவருக்கு நெட்வொர்க் மற்றும் வயர் உதவி இல்லாமல் ஷேர் செய்ய பயன்படுகிறது.

Whatsapp : இனி புகைப்படங்கள் , வீடியோக்களை ஷேர் செய்ய நெட்வொர்க் தேவையில்லை.. வாட்ஸ்அப்பின் அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 25 Jul 2024 18:20 PM

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் : ஆப்பிள் ஏர் டிராப் அம்சத்தை போலவே இன்டர்நெட் இல்லாமலே போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பகிரக்கூடிய அசத்தலான அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் , விரைவில் ஐபோன்களுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. டெஸ்ட் ஃபைட்-ல் உள்ள IOS-க்கான சமீபத்திய  பீட்டா வெர்ஷனில் இந்த “Nearby Share” அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்குமெண்டுகளை அருகில் உள்ளவருக்கு நெட்வொர்க் மற்றும் வயர் உதவி இல்லாமல் ஷேர் செய்ய பயன்படுகிறது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டுக்கு ஒரு மாதிரியும், IOS-க்கு ஒரு மாதிரியும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

IOS பயனர்கள் QR கோடை ஸ்கேன் செய்து பரிமாறிக்கொள்ளலாம்

ஆண்ட்ராய்டு பயனர்கள் அருகில் உள்ள நபர்களின் பெயர்களை கிளிக் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்பும் நிலையில் IOS பயனர்கள் QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பரிமாறிக்கொள்ளலாம். இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ள நிலையில், இது குறித்து கூடுதல் தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை.

கூடுதலாக புதிய இரண்டு அம்சங்களை வெளியிட திட்டமிடும் வாட்ஸ்அப்

கூடுதலாக வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டுக்கான புதிய இரண்டு அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறுஞ்செய்திகளை லைவாக மொழிப்பெயர்ப்பது மற்றும் வாய்ஸ் மெசேஜுகளை குறுஞ்செய்திகளாக மாற்றுவது ஆகும். வாட்ஸ்அப்பின் 2.24.15.8. ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இது காணப்பட்டதாக மற்றொரு தகவல் தெரிவித்துள்ளது. ஆரம்பக்கட்டத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த புதிய அம்சம் விரைவில் பிற மொழிகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : BSNL-க்கு படையெடுக்கும் மக்கள்.. மீண்டும் சலுகைகளை வழங்க தொடங்கிய ஜியோ.. முழு விவரம் இதோ!

வாஸ் மெசேஜுகளை குறுஞ்செய்திகளாக மாற்றும் அம்சம் குறித்தும் வாட்ஸ்அப் சில சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இது வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.24.15.5 -ல் கிடைக்கிறது. இது பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் வாட்ஸ்அப்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் தொடர்ந்து அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் ஃபேவரைட்ஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தது. வாட்ஸ்அப்பின் ஃபேவரைட்ஸ் ஃபில்டர் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் நபர்கள் மற்றும் குழுக்களை ஒரு பட்டியலாக உருவாக்க உதவும் புதிய அம்சம் ஆகும். இந்த பட்டியலை உங்கள் உரையாடல்களின் வரிசையில் முன் வைத்திருக்க இந்த புதிய அப்டேட் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் பயனர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் குரூப்கள் என அனைத்தையும் இந்த புதிய அம்சத்தின் மூலம் வரிசை படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிங்க : BSNL Recharge Plan: உங்க கிட்ட ரூ.100 இருக்கா? ஒரு மாதத்திற்கு பிரச்னை இல்ல… பிஎஸ்என்எல் வழங்கும் செம்ம திட்டம்!

Latest News