5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Whatsapp : 66 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வாட்ஸ்அப்!

Whatsapp Accounts | வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 66 லட்சம் கணக்குகளை முடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்தமாக முடக்கப்பட்ட 6,620,000 கணக்குகளில் 1,255,000 வாட்ஸ் அப் கணக்குகள் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமன்றி விதிகளை மீறியதன் காரணமாகவே இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் விளக்கமளித்துள்ளது.

Whatsapp : 66 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வாட்ஸ்அப்!
வாட்ஸ் அப்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 02 Jul 2024 20:51 PM

வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் : மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 66 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் விளக்கமளித்துள்ளது. மொத்தமாக முடக்கப்பட்ட 6,620,000 கணக்குகளில் 1,255,000 வாட்ஸ் அப் கணக்குகள் பிளாக் செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பயனாளர்கள் புகார் தெரிவிக்கும் முன்பே வாட்ஸ் அப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் இந்தியாவில் 550 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட பிரபலமான மொபைல் மெசேஜிங் தளமாக உள்ளது.

13,367 புகார்கள்

இந்தியாவில் இருந்து வாட்ஸ்அப்பிற்கு 13,367 புகார்கள் வந்துள்ளன. ஆனால் அவற்றில் வெறும் 31 புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. புதிய இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் படி வாட்ஸ்அப் நாட்டிலுள்ள குறைகள் மேல்முறையிட்டு குழுவிடமிருந்து 11 ஆணைகளை பெற்றுள்ளது. இந்நிலையில் “நாங்கள் வெளிப்படை தன்மையுடன் எங்கள் பணியை தொடர்வோம் மற்றும் இனிவரும் காலங்களில் அறிக்கைகளில் எங்கள் முயற்சிகள் பற்றிய தகவல்களை சேமிப்போம்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 71 லட்சம் கணக்குகள் முடக்கம்

ஏப்ரல் மாதத்தில் மெட்டாவுக்கு சொந்தமான இயங்குதளம் இந்தியாவில் 71 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளது. இந்த தளம் மார்ச் மாதத்தில் 10,554 புகார்களை பெற்றது. அதில் 11 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் கொண்ட குழுவால் இந்த நிறுவனம் இயக்கப்படுகிறது.

பயனர்களுக்கு வாக்குறுதி அளித்த வாட்ஸ்அப்

“பிரச்னைகளுக்குறிய உள்ளடக்கங்கள் மற்றும் தொடர்புகளை பற்றி எங்களுக்கு புகார் அளித்தால் நாங்கள் உதவுகிறோம். பயனர்களின் கருத்துகளை உன்னிப்பாக கவனித்து தவறான தகவல்களை தடுப்பதிலும், இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், தேர்தல் நேர்மையை பாதுகாப்பதிலும் வல்லுநர்களுடன் இணைந்து செயல்படுகிறோம்”என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.