WhatsApp : இனி போலி புகைப்படங்களுக்கு வாய்ப்பே இல்லை.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ள வாட்ஸ்அப்! - Tamil News | WhatsApp rolling out to new feature which help users to find out the authenticity of images | TV9 Tamil

WhatsApp : இனி போலி புகைப்படங்களுக்கு வாய்ப்பே இல்லை.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ள வாட்ஸ்அப்!

Published: 

05 Nov 2024 19:35 PM

New Feature | இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் இருந்தே அந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை அறிந்துக்கொள்ளலாம். வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யபப்ட உள்ளது.

1 / 5வாட்ஸ்அப்பில்

வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் புகைப்படங்களின் நம்பகத்தன்மையை சோதிக்கும் வகையில், புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய மெட்டா நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

2 / 5

இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் இருந்தே அந்த புகைப்படத்தின் நம்பகத்தன்மையை அறிந்துக்கொள்ளலாம். 

3 / 5

வாட்ஸ் அப்பின் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த, பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் சேட்டில் புகைப்படத்தை ஓப்பன் செய்ய வேண்டும். 

4 / 5

அப்போது புகைப்படத்திற்கு மேலே தோன்றும் 3 புள்ளிகளை கிளிக் செய்து, "Search on web" என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

5 / 5

இவ்வாறு செய்யும்போது அந்த புகைப்படம் உண்மையானதா அல்லது தொழில்நுட்ப உதவியுடன் சித்தரிகப்பட்டதா என்ற தகவல் கிடைக்கும். இதன் மூலம் போலி தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவது தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?
புரதத்தை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
... இதுதான் அதுக்கு காரணம் - ஐஸ்வர்ய லட்சுமி