WhatsApp Feature : இனி வாட்ஸ்அப்பிலும் “Chat Theme” செட் செய்யலாம்.. விரைவில் அறிமுகம்!

New Feature | குறிப்பாக End-to-end encryption, மோசடிகளில் இருந்து பாதுகாப்பு, வீடியோ காலின்போது Background-ஐ மறைப்பது உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால், வாட்ஸ்அப்பில் தனித்துவமான அம்சங்கள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான், தனித்துவமான பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.

WhatsApp Feature : இனி வாட்ஸ்அப்பிலும் Chat Theme செட் செய்யலாம்.. விரைவில் அறிமுகம்!

மாதிரி புகைப்படம் (Photo Credit : GettyImages)

Published: 

11 Oct 2024 17:02 PM

மெட்டாவின் வாட்ஸ்அப் செயலியில் தீம் செட் செய்வதற்கான புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பிறகாக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், தனித்துவமான அம்சங்கள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான், வாட்ஸ்அப் பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதில் ஒன்றுதான் சாட்களுக்கு தீம் செட் செய்வது. முன்னதாக இன்ஸ்டாகிராம் செயலியில் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டு பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது வாட்ஸ்அப் செயலியிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : Budget Smartphones : அக்டோபர் மாதம் விற்பனையில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி

சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் ஆதிக்கம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றன. மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம்.

இதையும் படிங்க : Google Chat : இனி கூகுள் சாட்டில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள்!

குறிப்பாக End-to-end encryption, மோசடிகளில் இருந்து பாதுகாப்பு, வீடியோ காலின்போது Background-ஐ மறைப்பது உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ஆனால், வாட்ஸ்அப்பில் தனித்துவமான அம்சங்கள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்த நிலையில்தான், தனித்துவமான பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சாட்களுக்கு தீம் செட் செய்யும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது வாட்ஸ்அப்.

இதையும் படிங்க : Android Tricks : ஆண்ட்ராய்டு பயனர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 ட்ரிக்ஸ்.. என்ன என்ன தெரியுமா?’

வாட்ஸ்அப்பின் சாட் தீம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட WABetaInfo

இது குறித்து WABetaInfo கூறியுள்ளதாவது, வாட்ஸ்அப் அதன் புதிய அம்சமான சாட் தீமை சோதனை செய்ய தொடங்கியுள்ளது. இது பயனர்கள் தங்களது உரையாடல்களை தங்களுக்கு பிடித்த வகையில் மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். தற்போது வாட்ஸ்அப், டார்க் மற்றும் லைட் மோட்களை பயன்பாட்டில் வைத்துள்ளது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய சாட் தீம் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டால் பயனர்களுக்கு 22 விதமான சாட் தீம்கள் மற்றும் 20 நிற வேறுபாடுகள் கிடைக்கும் என்று கூறியுள்ளது.

இதையும் படிங்க : Airtel : இனி மோசடிகள் குறித்து கவலை இல்லை.. ஏர்டெல் வழங்கும் அசத்தல் சேவை.. முற்றிலும் இலவசம்!

வாட்ஸ்அப்பின் இந்த சாட் தீம் அறிமுகம் செய்யப்பட்டதும் Settings-ல் சாட் தீம் அம்சத்தை பயன்படுத்தலாம். அதனை பயன்படுத்தி ஓவ்வொரு சாட்டுக்கும் தனித்துவமான தீம்களை செட் செய்ய முடியும். இந்த சாட் தீம்கள் மொத்தம் 20 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இன்ஸ்டகிராம் செயலியில் இதுபோன்ற தீம் செட்டிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அது பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இந்த சாட் தீம் செட்டிங் வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Flipkart Utsav Sale : மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி!

வாட்ஸ் அப்பின் இந்த புதிய அம்சம் இன்னும் சோதனை கட்டத்தை தாண்டாத நிலையில், குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. சோதனை நிறைவடைந்த பின் வாட்ஸ்அப்பின் அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!