WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் இருந்து மற்ற செயலிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.. விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!
New Update |சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றன.
வாட்ஸ்அப் குறித்த வெளியான புதிய தகவல் : வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப்பில் இருந்து மற்ற செயலிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் புதிய அம்சத்தை அறிமுக செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Digital Market Act என்ற நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ்அப் நிறுவனம் இந்த புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் மூலம் வேறு ஒரு செயலியை பயன்படுத்தும் நபர்களிடமும் வாட்ஸ்அப் பயனர்கள் உரையாட முடியும். இதன் மூலம் வாட்ஸ் அப்பின் சேவை விரிவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சத்திற்கு “Third Party Chats” என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Apple 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்.. லைவ் ஸ்ட்ரீமிங்கை பார்ப்பது எப்படி.. முழு விவரம் இதோ!
வாட்ஸ்அப் பயன்படுத்தி மற்ற செயலிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்
பயனர்களுக்கு உரையாடல்களை மேலும் சுலப படுத்தும் வகையில் வாட்ஸ்ச்அப்பில் இந்த புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதுவரை மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் உள்ள பயனர்களிடம் மட்டுமே உரையாடி வந்த நிலையில், இனி வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வேறு செயலிகளை பயன்படுத்தும் பயனர்களுடனும் உரையாடலாம். வாட்ஸ் அப்பின் இந்த புதிய அம்சம் முக்கியமாக ஐரோப்பியர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. காரணம் அங்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பியர்களுக்காக இந்த புதிய அம்சம் உருவாக்கப்படுகிறது. இந்த புதிய அம்சத்தை பயனர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் இதனை வடிவமைத்து வருகிறது.
இதையும் படிங்க : iPhone 15 Series : அதிரடி தள்ளுபடியுடன் விற்பனையாகும் ஐபோன் 15 சீரீஸ்.. இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
உலக அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலி
சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றன. மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். தங்களின் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்டுகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் செயலில் இருந்து மற்ற செயலிகளில் உள்ள பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.