WhatsApp : வாட்ஸ்அப்பின் அசத்தலான புதிய ஷார்ட்கட்.. இனி கவலை இல்லை.. என்ன தெரியுமா?
New Shortcut | தங்களின் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்டுகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்ன அப்டேட், அதன் சிறப்பு அம்சம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸஅப் வீடியோ கால் அப்டேட் : சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் பங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றன. மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். தங்களின் பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு, வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது சில அப்டேட்டுகளை வெளியிடும். அந்த வகையில் தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்ன அப்டேட், அதன் சிறப்பு அம்சம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Telegram : டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டால் என்ன செய்வது.. கவலை வேண்டாம்.. இந்த 5 செயலிகள் இருக்கிறதே!
மார்க் ஆல் சாட்ஸ் அஸ் ரீட் அட் ஒன்ஸ் புதிய அம்சத்தை சோதனை செய்து வரும் வாட்ஸ் அப்
அதாவது மார்க் ஆல் சாட்ஸ் அஸ் ரீட் அட் ஒன்ஸ் ( Mark All Chats As Read At Once ) என்கிற ஆப்ஷனுக்கான ஷார்ட்கட் ஆகும். இந்த ஆப்ஷனுக்கான ஷார்ட்கட்டை தான் வாட்ஸ்அப் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஷார்ட்கட்டின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதை எப்படி பயன்படுத்துவது என்று விரிவாக பார்க்கலாம்.
மார்க் ஆல் சாட்ஸ் அஸ் ரீட் அட் ஒன்ஸ் அம்சத்தின் சிறப்புகள் என்ன?
WABetaInfo வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, வாட்ஸ்அப் ஒரு புதிய ஷார்கட்டை சோதனை செய்து வருகிறது. இந்த புதிய அம்சம் மூலம் அனைத்து சாட்களிலும் உள்ள மேசேஜ்களையும் ஒரே நேரத்தில் படித்ததாக மார்க் செய்ய முடியும். WABetaInfo வெளியிட்டுள்ள ஸ்க்ரீன்ஷாட் வழியாக, இந்த புதிய ஷாட்கட் ஓவர்ஃப்ளோ மெனுவில் தோன்றும். இதை ஸ்டார் மெசேஜஸ் விருப்பத்திற்கு கீழே, ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் அணுகலாம். அனைத்து குறுஞ்செய்திகளையும் படித்ததாக குறிக்கும் விரும்பம் ஏற்கனவே ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப்பில் உள்ள நிலையில், அதற்கு பல படிகள் தேவைப்படும் நிலையில், அதை விரைவாக ஆணுகவே இந்த ஷார்கட் உருவாக்கப்படுள்ளது.
இதையும் படிங்க : YouTube Premium Plans : யூடியூப் ப்ரீமியம் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்திய கூகுள்.. எவ்வளவு தெரியுமா?
இந்த புதிய அம்சம் தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்காது என்றாலும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.