5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நாள் குறித்த ஜியோமி.. ரெட் மீ நோட் 14 சீரிஸ் எப்போது?

Redmi Note 14 series: ரெட் மீ நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் எப்போது? இதன் விலை எவ்வளவு நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன? ஸ்மார்போனின் மாடல் எப்படி இருக்கும்?

நாள் குறித்த ஜியோமி.. ரெட் மீ நோட் 14 சீரிஸ் எப்போது?
ரெட்மீ நோட் 14 ஸ்மார்ட்போன்
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 22 Nov 2024 17:21 PM

ஜியோமி நிறுவனம், ரெட்மீ நோட் 14-ஐ அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதில், மொத்தம் 3 மாடல்கள் உள்ளன. நோட் ப்ரோ மற்றும் நோட் ப்ரோ+ மற்றும் அடிப்படை மாடல் ஆகும். முன்னதாக, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்திலே இந்த மாடல்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தன. இந்நிலையில், ரெட் மீ 14 நோட் அறிமுக தேதி ட்விட்டரில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி வெளியீட்டு தேதி அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இது சீனாவில் என்ன விலையில் விற்பனையாகிறது? இந்தியாவில் எவ்வளவு விலையில் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளன? ஸ்மார்ட்போனின் மாடல் மற்றும் கேமரா அளவு எப்படி இருக்கும் என்பன போன்ற பல கேள்விகளுக்கு பதிலை பார்க்கலாம்.

ரெட்மீ நோட் 14 மாடல் விவரங்கள்

ரெட்மீ நோட் 14 புதுப்பிப்பு சீரிஸின் அனைத்து மாடல்களும் 6.67 இன்ச் ஓஎல்இடி திரையுடன் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகின்றன. இதில், அடிப்படை மாறுபாடு மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா எஸ்.ஓ.சி ஆல் இயக்கப்படுவது ஆகும்.
மேலும், ப்ரோ மற்றும் ப்ரோ ப்ளஸ் பதிப்புகள் முறையே ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜெனரேசன் 3 மற்றும் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட்டைப் பெறுகின்றன.

இதையும் படிங்க : Samsung Galaxy S25 Ultra : சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா.. சிறப்பு அம்சங்கள் குறித்து வெளியான தகவல்!

கேமரா மாடல் எப்படி

கேமராவை பொறுத்தவரை மாடல்கள் இரண்டும் 50எம்.பி முதன்மை கேமரா மற்றும் 8எம்.பி அல்ட்ராவைடு கேமராவுடன் பொருத்தப்பட்டுள்ளன.
நோட் ப்ரோ+ பதிப்பு, கூடுதலாக 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமராவுடன் வருகிறது. ப்ரோவில் 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளது.

பேட்டரி- சார்ஜிங் திறன்

ரெட்மீ நோட் 14 ப்ரோ+ ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. அதே நேரம், நோட் 14 ப்ரோ 44W ஃபாஸ்ட் சார்ஜிங் திறனுடன் 5,500mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது.
மேலும், இரண்டு போன்களும் IP66+IP68+IP69 நீர்ப்புகாத அமைப்பை கொண்டுள்ளன.

விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படும்?

சீனாவில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.18 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை வருகிறது. ஆகவே இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20 ஆயிரத்தில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப் அழைப்பை ரெக்கார்டு செய்வது எப்படி? இதை ஃபாலோ பண்ணுங்க!

Latest News