WWWF : விரைவில் மூடப்படும் World Wide Web Foundation .. ஏன் தெரியுமா? - Tamil News | World Wide Web Foundation is shutting down know the reason why it is shutting down | TV9 Tamil

WWWF : விரைவில் மூடப்படும் World Wide Web Foundation .. ஏன் தெரியுமா?

Updated On: 

04 Oct 2024 17:11 PM

World Wide Web Foundation | WWWF தொடங்கப்பட்டபோது வெறும் 20% உலக மக்கள் மட்டுமே இணைய வசதிகளை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 70% மக்கள் பயன்படுத்துகின்றனர். இதுவே World Wide Web Foundation மூடப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

WWWF : விரைவில் மூடப்படும் World Wide Web Foundation .. ஏன் தெரியுமா?

மாதிரி புகைப்படம் (Photo Credit : JuSun/E+/Getty Images)

Follow Us On

டிம் பெர்னர்ஸ் லீ என்பவரால் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் World Wide Web Foundation. இது அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் எளிதில் அனுக கூடிய இண்டர்னெட் சேவையை வழங்குவதை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்டது. WWWF தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை கடந்த 15 ஆண்டுகளாக இணையத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த நிலையில் தான், WWWF மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது ஏன் மூடப்பட உள்ளது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Lava Agni 3 : இந்தியாவில் இன்று அறிமுகமானது லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

2009-ல் தொடங்கப்பட்ட World Wide Web Foundation

இணையதளம் அனைவருக்குமானது, அதை அனைவராலும் பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் என்பதை மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் தான் World Wide Web Foundation தொடங்கப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு WWWF தொடங்கப்பட்ட போது, உலக மக்கள் தொகையில் வெறும் 20 சதவீத மக்கள் மட்டுமே இணையதள வசதியை பயன்படுத்தினர். எனவே, குறைந்த விலையில் இணைய வசதியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் WWWF செயல்பட தொடங்கியது. தற்போது இருக்கு இணைய வசதிகளுக்கு எல்லாம் இது முன்னோடி என்றால் அது மிகை ஆகாது.

இதையும் படிங்க : Free Apple AirPod : தீபாவளி சலுகை.. இலவசமாக ஏர்பாட் வழங்கும் ஆப்பிள்.. 2 நாட்களுக்கு மட்டும் தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!

World Wide Web Foundation மூடப்படுவதற்கான காரணம் என்ன?

WWWF தொடங்கப்பட்டபோது வெறும் 20% உலக மக்கள் மட்டுமே இணைய வசதிகளை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது 70% மக்கள் பயன்படுத்துகின்றனர். இதுவே World Wide Web Foundation மூடப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் இணைய சேவை சென்றடைந்துள்ள நிலையில், தனது பாதையை மாற்ற WWWF திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பாதுகாப்பான மற்றும் மலிவான விலையில் இணைய சேவையை வழங்க பல்வேறு புதிய நிறுவனங்களும் வந்துவிட்டன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் WWWF இந்த முடிவை எடுத்துள்ளது.

இதையும் படிங்க : Apple Diwali Sale : ஆப்பிள் தீபாவளி சேல்.. ஏர்பாட்ஸ் மற்றும் வாட்ச்களுக்கு அதிரடி சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!

பாதயை மாற்ற திட்டமிட்டுள்ள World Wide Web Foundation

சமீப காலமாகவே ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தகவல் திருட்டு மூலம் குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக சைபர் திருட்டு குறித்த அஞ்சம் மக்கள் மத்தியில் பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் டிம் பெர்னர்ஸ் லீ, Solid Protocol என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளார். இதன் மூலம் தனிநபர்களுக்கு தங்களது தனிப்பட்ட விவரங்களை எவ்வாறு பாதுகாப்பது, தங்களது விவரங்கள் இணையத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை மக்களுக்கு விளக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

இதையும் படிங்க : WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் இருந்து மற்ற செயலிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.. விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

World Wide Web Foundation அதன் நோக்கத்தை நிறைவேற்றி அதன் சவால்களை எதிர்க்கொண்டுள்ள நிலையில், அது இணையம் மற்றும் அதன் பயனர்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Lava Agni 3 : இந்தியாவில் இன்று அறிமுகமானது லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?
Free Apple AirPod : தீபாவளி சலுகை.. இலவசமாக ஏர்பாட் வழங்கும் ஆப்பிள்.. 2 நாட்களுக்கு மட்டும் தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!
Apple Diwali Sale : ஆப்பிள் தீபாவளி சேல்.. ஏர்பாட்ஸ் மற்றும் வாட்ச்களுக்கு அதிரடி சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க!
iPhone Diwali Sale : ஸ்மார்ட்போன்கள் முதல் மேக் புக் வரை.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி சலுகைகளை வழங்கும் ஆப்பிள்!
Apple 15 Series : இன்னும் 3 நாட்கள் மட்டும் தான்.. மீண்டும் விலையேற போகும் ஐபோன் 15.. மிஸ் பண்ணிடாதீங்க!
Google Pixel 9 Pro XL : ரூ.10,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல்.. முழு விவரம் இதோ!
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version