5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Google Birthday : உலகின் சிறந்த தேடுபொறி.. 26வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்..

25 years of Google | கூகுள் நிறுவனம் கடந்த 1998 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதுமுதலே தனது பயனர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. பல தேடுபொறி நிறுவனங்கள் வந்தாலும், கூகுள் இன்றளவும் தனது இடத்தை யாருக்கும் கொடுக்காமல் தக்க வைத்துள்ளது. அதற்கு காரணம் கூகுள் நிறுவனம் காலத்திற்கு ஏற்ப அனைத்தையும் அப்டேட் செய்துக்கொள்வது தான்.

Google Birthday : உலகின் சிறந்த தேடுபொறி.. 26வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்..
கூகுள்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 27 Sep 2024 15:25 PM

உலகின் தலைசிறந்த தேடுபொறியான கூகுள் நிறுவனம் தனது 26வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே கூகுள் மாறிவிட்ட நிலையில், 25 ஆண்டுகள் வெற்றிகரமாக கூகுள் தனது இடத்தை நிலைநாட்டி சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக கூகுள் இந்தியா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் கடந்த காலங்களில் கூகுள் நிறுவனத்தின் பெயர் எப்படி இருந்தன அது தற்போது எப்படி உருமாற்றம் அடைந்துள்ளது என்பதை சித்தரிக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

வாழ்வின் அங்கமாக மாறிய கூகுள்

கூகுள் நிறுவனம் கடந்த 1998 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதுமுதலே தனது பயனர்களுக்கு பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. Firefox, Opera, Brave உள்ளிட்ட பல தேடுபொறி நிறுவனங்கள் வந்தாலும், கூகுள் இன்றளவும் தனது இடத்தை யாருக்கும் கொடுக்காமல் தக்க வைத்துள்ளது. அதற்கு காரணம் கூகுள் நிறுவனம் காலத்திற்கு ஏற்ப அனைத்தையும் அப்டேட் செய்துக்கொள்வது தான். தேடுவதற்கு எளிதாகவும், மிக விரைவில் பதில் கிடைத்துவிடுவதாலும் கூகுளின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உணவு, உடை, இருப்பிடம் எவ்வளவு முக்கியமாக உள்ளதோ அதே அளவிற்கு கூகுளின் தேவையும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இப்படி ஒரு பிரச்னையா?.. குழம்பும் பயனர்கள்!

பிராந்திய மொழிகளில் சேவைகளை வழங்க தொடங்கிய கூகுள்

முன்பு ஆங்கிலத்தில் மட்டுமே கூகுளில் தேட முடியும் என்ற நிலை இருந்த நிலையில் அது காலபோக்கில் மாறி பிராந்திய மொழிகளிலும் தேடும் அம்சம் அறிமுக செய்யப்பட்டது. இது கூகுளை உலகின் மூளை முடுக்கு எங்கிலும் பயணிக்க வழிவகை செய்தது. முன்னதாக ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் பயன்பாடு காரணமாக மக்கள் மத்தியில் கூகுள் பிரபலமடைந்த நிலையில், பிராந்திய மொழிகளின் அறிமுகம் அனைத்து தரப்பு மக்களும் கூகுளை எளிதாக பயன்படுத்தும் வகையில் அமைந்தது.

இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க வரிசையில் நிற்க தேவை இல்லை.. வெறும் 20 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனங்கள்!

வாய்ஸ் சர்ச் அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள்

பிராந்திய மொழிகளை தொடர்ந்து கூகுள் வாய்ஸ் சர்ச் அம்சத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நாம் எதை குறித்து தேட விரும்புகிறோமோ அதை கூகுளிடம் கூறினால் போதும். அதற்கான விடையை கண்டுபிடித்து தந்துவிடும். இந்த அம்சம் எழுத, படிக்க தெரியாத மற்றும் கல்வி அறிவு இல்லாதவர்களையும் கூகுள் தேடுபொறியை பயன்படுத்த வழிவகை செய்தது.

இதையும் படிங்க : iPhone 16 Series : வெளிநாடுகளில் இந்தியாவை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படும் ஐபோன் 16.. எவ்வளவு தெரியுமா?

வாய்ஸ் சர்ச் அம்சத்தை தொடர்ந்து மொழிப்பெயர்பு அம்சத்தை அறிமுகம் செய்தது கூகுள். அதாவது, வேறு ஒரு மொழியில் இருக்கும் தகவல்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்பு செய்யும் அம்சத்தை அறிமுகம் செய்தது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காரணம் மொழி தெரியாதவர்கள் கூட அதன் மூலம் சுலபமாக தகவலை தெரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி புகைப்படத்தை வைத்து தேடுவது, புகைப்படத்தில்  இருக்கும் தகவல்களை எழுத்துக்களாக மாற்றி தருவது என பல்வேறு சேவைகளையும் கூகுள் செய்து வருகிறது.

இதையும் படிங்க : Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்!

மேலும் கூகுளின் ஜிமெயில், மேப்ஸ், கூகுள் பே, யூடியூப் உள்ளிட்ட செயலிகள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மட்டுமன்றி அன்றாட வாழ்வின் அங்கமாகவே மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Latest News