Redmi 13 5G : விரைவில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ள ரெட்மி 13 5G.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன? - Tamil News | Xiaomi released key facts about the next launch of Redmi 13 5G smartphone | TV9 Tamil

Redmi 13 5G : விரைவில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ள ரெட்மி 13 5G.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

Updated On: 

08 Jul 2024 15:07 PM

Smartphone | ஜியோமி நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனில் விலை ரூ.15,000-க்குள் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகா பிக்சல் சென்சார் உடன் கூடிய 108 மெகா பிக்சல் கேமரா மற்றும் 8 மெக பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமரா உள்ளது குறிப்பிடத்தக்கது.

Redmi 13 5G : விரைவில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ள ரெட்மி 13 5G.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

மாதிரி புகைப்படம்

Follow Us On

ரெட்மி 13 5G ஸ்மார்ட்போன் : ஜியோமி நிறுவனம் பட்ஜெட் விலை கொண்ட தனது ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனை வரும் ஜூலை 9 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இதனை முன்னிட்டு அந்த நிறுவனம், சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனில் கிரிஸ்டல் கிளாஸ் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. இது போனுக்கு சிறந்த தோற்றத்தை கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது. ரெட்மி 12 5G-ன் வெற்றியை தொடர்ந்து, 13 5G-க்கான அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட 10 மாதங்களுக்கு பிறகு சிறந்த வடிவிலான ஸ்மார்ட்போனை ரூ.15,000-க்குள்ளான விலையில் அறிமுகப்படுத்துகிறது ஜியோமி.

ரெட்மி 13 5G-ன் சிறப்பு அம்சங்கள்

ரெட்மி 13 5G ஸ்மார்ட் போன் சிறந்த வெளி தோற்றம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. போனின் பின்பக்கத்தில் ரிங் லைட் உடன் கூடிய இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது ரெட்மி 12 5G தோற்றத்தை போலவே இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ரிங் லைட் அம்சம் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. ரெட்மி 13 5G ஸ்மார்ட் போனில் 6.67 இன்ச் டிஸ்பிளே உள்ளது. அதுமட்டுமன்றி சிறந்த அனுபவத்திற்காக Punch – hole notch அம்சமும் உள்ளது.

இதையும் படிங்க : Cyber Crime : கிரெடிட் கார்டு மோசடிகளை தடுக்க இவற்றை ஃபாலோ பண்ணுங்க.. முழு விவரம் இதோ!

Punch – hole notch-க்கு கொரிலா கிளாஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.ரெட்மி 13 5G குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 பிராசஸரை கொண்டுள்ளது. இதே பிராசஸர் தான் ரெட்மி 12 5G ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்பட்டிருக்கும்.  ரெட்மி 13 5G ஸ்மார்ட் போனில் 2 மெகா பிக்சல் சென்சார் உடன் கூடிய 108 மெகா பிக்சல் கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இதில் 8 மெக பிக்சலுடன் கூடிய செல்ஃபி கேமராவும் உள்ளது.

இதையும் படிங்க : WiFi Calling : நெட்வொர்க் இல்லாதபோதும் போன் செய்யலாம்.. WIFI அழைப்பு குறித்து தெரியுமா?

ரெட்மி 13 5G -ன் விலை எவ்வளவு இருக்கும்?

ரெட்மி 13 5G -ன் சரியான விலையைல் ஜியோமி இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் ரெட்மி 13 5G -ன் விலை ரூ.15,000-க்குள் இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்த போன் வரும் ஜூலை 9 ஆம் தேதி இரவு 12 மணிக்கு அமேசானில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஜியோமி ரெட்மி 13 5G ஸ்மாட் போனை அதிக விலைக்கு அறிமுகம் செய்து, பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன் வாங்க விரும்புபவர்களுக்காக குறிப்பிட்ட வங்கிகளுக்கு சலுகைகள் வழங்கவும் ஜியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனில் விலை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version