Aadhaar : ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை மாற்றுவது எப்படி தெரியுமா? விவரம் இதோ! - Tamil News | You can easily change your mobile by following this simple step | TV9 Tamil

Aadhaar : ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை மாற்றுவது எப்படி தெரியுமா? விவரம் இதோ!

Updated On: 

05 Jul 2024 16:24 PM

Aadhaar Correction | ஆதாரில் மொபைல் எண்ணை திருத்த வேண்டும் என்றால் இ சேவை மையங்களுக்கு சென்று தான் திருத்தம் செய்ய முடியும். ஆன்லைனில் திருத்தம் செய்ய முடியாது. எனவே இ சேவை மையத்திற்கு சென்று திருத்த படிவத்தை பெற்று அதில் சரியான தகவல்களை நிரப்பி சமர்பித்தால் 90 நாட்களுக்குள் உங்கள் ஆதாரில் மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும்.

Aadhaar : ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை மாற்றுவது எப்படி தெரியுமா? விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Follow Us On

ஆதார் திருத்தம் : ஆதார் எண் ஒரு தனி நபர் அடையாளம் மட்டுமன்றி அத்தியாவசிய தேவையும் ஆகிவிட்டது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஆதார் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை  அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேறுவது முதல் மருத்துவமனை வரை, அனைத்து இடங்களிலும் முதன்மை ஆதாரமாக ஆதார் கேட்கப்படுகிறது. ஒருவேளை ஆதார் அட்டையை மறந்து வைத்து விட்டாலோ அல்லத்து தொலைந்துவிட்டாலோ எளிதாக இணையதளம் மூலம் ஆதார் அட்டையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ஆதாருக்கென்று பிரத்யேக இணையதளமும் உள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் மொபைல் எண்ணை பதிவிட்டால், உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். அதை உள்ளிட்டு ஆதார் அட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

மொபைல் எண் மாற்ற என்ன செய்ய வேண்டும்?

அதற்கு உங்கள் மொபைல் எண் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். அப்படி உங்களது மொபைல் எண் தவறாக உள்ளது என்றால் அதை உடனடியாக மாற்ற வேண்டும். ஆனால் ஆன்லைனில் மொபைல் எண்ணை மாற்ற முடியாது. உங்கள் வீட்டின் அருகில் உள்ள இ சேவை மையங்களில் தான் மொபைல் எண்ணை மாற்ற முடியும்.

ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?

 

  1. உங்கள் வீட்டின் அருகில் உள்ள ஆதார் இ சேவை மையத்திற்கு செல்லுங்கள்.
  2. அங்கு உங்களுக்கு திருத்தங்களை மேற்கொள்வதற்கான படிவம் கொடுக்கப்படும். அதில் நீங்கள் எந்த மொபைல் எண்ணை பயன்படுத்த விரும்புகிறீர்களோ அதை பிழை இல்லாமல் நிரப்ப வேண்டும்.
  3. பிறகு கை ரேகை மற்றும் கண் பதிவு செய்ய வேண்டும்.
  4. பிறகு விவரங்களை நிரப்பிய படிவத்தை இ சேவை மைய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும்.
  5. இதனை தொடர்ந்து உங்களுக்கு திருந்தங்களை மேற்கொண்டதற்கான எண் வழங்கப்படும். அந்த எண்ணை வைத்து உங்கள் மொபைல் எண் மாறிவிட்டதா என்பதை ஆதார் இணையதள மூலம் நீங்கள் அறிந்துக்கொள்ளலாம்.
  6. 90 நாட்களுக்குள் உங்கள் மொபைல் எண் அப்டேட் ஆகிவிடும்.

இதையும் படிங்க : Whatsapp AI : இனி வாட்ஸ்அப்பிலும் AI.. மெட்டாவின் அதிரடி அறிவிப்பு.. சிறப்பு அம்சங்கள் என்ன?

முன்னதாக ஆதார் எண்ணை இணையதள மூலம் மாற்றும் சேவை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் பாதுகாப்பு காரணமாக UDAI, இ சேவை மையங்களுக்கு சென்று மாற்றும்படி மாற்றி அமைத்துள்ளது. எனவே ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டும் என்றால் மேற்கண்ட முறையை பின்பற்றி இ சேவை மையங்களில் மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version