YouTube : யூடியூபில் “Humming” செய்தே பாடல்களை கண்டுபிடிக்கலாம்.. உங்களுக்கு தெரியுமா? - Tamil News | You can find a son in YouTube by humming a tune which stuck in your mind | TV9 Tamil

YouTube : யூடியூபில் “Humming” செய்தே பாடல்களை கண்டுபிடிக்கலாம்.. உங்களுக்கு தெரியுமா?

Published: 

07 Nov 2024 19:55 PM

Song Search | நமக்கு திடீரென ஏதோ ஒரு டியூன் தோன்றும். ஆனால் அந்த டியூனுக்கான பாடல் நினைவில் வராது. அதற்காக மிக ஆழமாக யோசிப்போம் ஆனாலும் கூட பாடல் நினைவில் வராது. இந்த சிக்கலை சரிசெய்ய யூடியூபில் ஒரு சிறந்த ஆப்ஷன் உள்ளது.

1 / 6உலக

உலக அளவில் பெரும்பாலான மக்கள் யூடியூப் தளத்தை விரும்பு பயன்படுத்துகின்றனர். பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பது என பல பொழுதுபோக்கு அம்சங்களை யுடியூப் வழங்கி வருகிறது. 

2 / 6

இந்த நிலையில் நமக்கு திடீரென ஏதோ ஒரு டியூன் தோன்றும். ஆனால் அந்த டியூனுக்கான பாடல் நினைவில் வராது. அதற்காக மிக ஆழமாக யோசிப்போம் ஆனாலும் கூட பாடல் நினைவில் வராது. 

3 / 6

இத்தகைய சவாலான சூழலை யூடியூப் மிகவும் எளிதாக்குகிறது. யூடியூபில் நீங்கள் ஹம் செய்வதன் மூலம் பாடலை தேட முடியும். 

4 / 6

அதற்கு முதலில் யூடியூப் தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சர்ச் (search) ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். 

5 / 6

அங்கு சர்ச் பாருக்கு அருகில் ஒரு மைக்ரோபோன் குறியீடு இருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் தேட விரும்பும் பாடலை ஹம் செய்யுங்கள். 

6 / 6

நீங்கள் ஹம் செய்ததை வைத்து யூடியூப் அது தொடர்பான பாடல்களை திரையில் காட்டும். அதில் நீங்கள் தேடிய பாடல் கிடைப்பதற்கு 80 சதவீதம் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?