5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!

iPhone 15 Series | பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் வெளியானதை தொடர்ந்து, ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் ரூ.1,59,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டலில் வெறும் ரூ.1,37,990-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
பிளிப்கார்ட் சேல்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 16 Sep 2024 20:44 PM

ஐபோன்களுக்கு அதிரடி தள்ளுபடி : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலை முன்னிட்டு ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே ஐபோன் 16 சீரீஸ் அறிமுகத்தை முன்னிட்டு ஆப்பிள் நிறுவனம் விலை குறைப்பு செய்த நிலையில், தற்போது பிக் பில்லியன் டேஸ் சேலை முன்னிட்டு பிளிப்கார்ட் அதிரடி சலுகையை வழங்க உள்ளது. இந்த நிலையில், பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் எப்போது நடைபெற உள்ளது, அதில் ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி வழங்கப்பட உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல்

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேச் சேல் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்கள் வரை அனைத்தும் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் ஐபோன் 15 இந்தியாவில் ரூ.79,999-க்கு கடந்த 2023 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த ஆப்பிள் ஐபோன் 15 ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேலில் ஐபோன் 15-ன் விலை மேலும் குறைய உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

செப்டம்பர் 23 ஆம் தேதி ஐபோன் 15-க்கு தள்ளுபடியை அறிவிக்க உள்ள பிளிப்கார்ட்

இந்த நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஐபோன் 15, ஐபோன் 15 பிள, ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ ஆகியவற்றுக்கு சிறந்த  தள்ளுபடி வழங்க உள்ளதாக கூறியுள்ளது. தற்போது வரை ஐபோன் 15-க்கு வழங்க உள்ள தள்ளுபடியை குறிப்பிடாத பிளிப்கார்ட், வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி அந்த சிறப்பு தள்ளுபடியை அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!

அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்பட்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்

பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் வெளியானதை தொடர்ந்து, ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் ரூ.1,59,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்நிலையில் ரிலையன்ஸ் டிஜிட்டலில் வெறும் ரூ.1,37,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது மொத்தமாக ரூ.21,910 தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ.5,000 கூடுதல் தள்ளுபடியும் வழங்கப்பட்டது. இந்த சலுகை மூலம் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெறும் ரூ.1,32,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐபோன் 15 ப்ரோ பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1.29.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்!

ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் வரவு, அமேசான்,பிளிப்கார்ட் நிறுவனங்களின் சேல் ஆகியவற்றுடன் சேர்த்து ஐபோன் 15 சீரீஸ் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என தலவல் வெளியாகியுள்ளது. எனவே பல நாட்களாக ஐபோன் வாங்க நினைத்து காத்திருந்தவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News