5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhaar Card : ஆதார் கார்டில் இந்த தகவலை மட்டும் ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாது.. ஏன் தெரியுமா?

Update | ஆதார் இத்தகைய முக்கியமான ஆவணமாக உள்ள நிலையில், அதில் இருக்க கூடிய தகவல்கள் அனைத்தும் துல்லியமாகம் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இந்த நிலையில், ஆதாரின் இணையதளம் மூலமாக நீங்கள் உங்களின் தவல்களை திருத்திக் கொள்ளலாம். ஆனால் ஆதாரில் சில தகவல்களை மட்டும் ஆன்லைனில் திருத்த முடியாது அவை எவை என்று தெரியுமா?. 

Aadhaar Card : ஆதார் கார்டில் இந்த தகவலை மட்டும் ஆன்லைனில் அப்டேட் செய்ய முடியாது.. ஏன் தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 23 Aug 2024 11:07 AM

ஆதார் திருத்தம் : ஆதார் எண் ஒரு தனி நபர் அடையாளம் மட்டுமன்றி அத்தியாவசிய தேவையும் ஆகிவிட்டது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஆதார் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை  அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேறுவது முதல் மருத்துவமனை வரை, அனைத்து இடங்களிலும் முதன்மை ஆதாரமாக ஆதார் கேட்கப்படுகிறது. ஆதார் இத்தகைய முக்கியமான ஆவணமாக உள்ள நிலையில், அதில் இருக்க கூடிய தகவல்கள் அனைத்தும் துல்லியமாகம் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது. இந்த நிலையில், ஆதாரின் இணையதளம் மூலமாக நீங்கள் உங்களின் தவல்களை திருத்திக் கொள்ளலாம். ஆனால் ஆதாரில் சில தகவல்களை மட்டும் ஆன்லைனில் திருத்த முடியாது அவை எவை என்று தெரியுமா?.

இதையும் படிங்க : Aadhaar & PAN : வாட்ஸ்அப்பில் ஆதார் மற்றும் பான் கார்டு டவுன்லோட் பண்ணலாமா.. அட இது தெரியாம போச்சே!

எந்த தகவலை ஆன்லைனில் திருத்தம் செய்ய முடியாது?

ஆதார் கார்டில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். ஆனால் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியாது. ஒருவேளை ஆதார் கார்டில் நீங்கள் உங்கள் புகைப்படத்தை அப்டேட் செய்ய வேண்டும் என நினைத்தால், அருகில் உள்ள இ சேவா மையத்திற்கு சென்றுதான் அப்டேட் செய்ய வேண்டும். ஆன்லைனில் அதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படத்தை இ சேவை மையம் மூலம் அப்டேட் செய்வது எப்படி?

  1. உங்கள் ஆதார் கார்டில் புகைப்படத்தை அப்டேட் செய்ய கீழ் காணும் ஸ்டெப்ஸ்களை பின்பற்றலாம்.
  2. ஆதாரில் கார்டில் புகைப்படத்தை மாற்ற அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
  3. அங்கு புகைப்படத்தை மாற்றுவதற்காக ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.
  4. பின்னர் புதியதாக புகைப்படம் எடுத்து அதனை உங்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்து விடுவார்கள்.
  5. புகைப்படத்தை அப்டேட் செய்த பிறகு சில நாட்கள் கழித்து புகைப்படம் அப்டேட் ஆகியுள்ளதா என்பதை சோதித்துவிட்டு இ ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
  6. அதனை தொடர்ந்து திருத்தம் செய்யப்பட்ட ஆதார் கார்டு உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதையும் படிங்க : 9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் சிறை தண்டனை.. ரூ.2,00,000 அபராதம்.. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

மேற்கண்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி ஆதார் கார்டில் உங்கள் புகைப்படத்தை மாற்றிக்கொள்ளலாம். இந்நிலையில் ஆதார் கார்டில் இ சேவை மையங்களில் மட்டுமே புகைப்படத்தை மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News