BSNL : இனி சிம் கார்டு இல்லாமலே ஃபோன் பேசலாம்.. அடுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பிஎஸ்என்எல்.. எப்படி தெரியுமா?

Sim Card | பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்து வரும் நிலையில், அதனை வலுப்படுத்தும் விதமாக புதிய சேவை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதாவது, சிம் கார்டு இல்லாமல் ஃபோன் கால் பேசும் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

BSNL : இனி சிம் கார்டு இல்லாமலே ஃபோன் பேசலாம்.. அடுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பிஎஸ்என்எல்.. எப்படி தெரியுமா?

மாதிரி புகைப்படம்

Published: 

08 Nov 2024 17:44 PM

அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் பல சிறப்பு திட்டங்களையும் சேவைகளையும் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக, குறைந்த விலை கொண்ட புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்வது, பயனர்களின் பாதுகாப்பு மற்றும் சேவையை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வது என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக, அதன் பயனர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இதுவரை இல்லாத ஒரு புதிய நடைமுறையை அறிமுகம் செய்யும் பணியில் பிஎஸ்என்எல் இறங்கியுள்ளது. அதாவது, சிம் கார்டு இல்லாமலே ஃபோன் கால் பேசும் புதிய அம்சத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் பணியில் பிஎஸ்என்எல் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க : YouTube : யூடியூபில் “Humming” செய்தே பாடல்களை கண்டுபிடிக்கலாம்.. உங்களுக்கு தெரியுமா?

ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்திய நிறுவனங்கள்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட சில தனியார் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. விலையை உயர்த்தியது மட்டுமன்றி, ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவையை பயன்படுத்துவதிலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது.  இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பயனர்கள், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு தங்கள் மொபைல் எண்களை மாற்றத் தொடங்கினர். மிக குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான பயனர்கள் தங்களின் மொபைல் எண்களை, அரசின் பிஎஸ்என்எல் தொலைத்தொடர் நிறுவனத்திற்கு மாற்ற விண்ணப்பித்தை அடுத்து ஜியோஉள்ளிட்ட நிறுவனங்கள் கடும் அதிர்ச்சி அடைந்தன.

களக்கத்திற்கு உள்ளாகிய ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் – ஏன் தெரியுமா?

அதன் காரணமாக ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இழந்த தங்களது பயனர்களை மீட்கும் வகையில் பல புதிய சிறப்பு அம்சங்களையும், பிளான்களையும் வெளியிட்டு வருகின்றன. இதேபோல அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல சிறப்பு முயற்சிகள் மற்றும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, குறைந்த விலைக்கு ரீச்சார்ஜ் திட்டம் வழங்குவது, குறைந்த விலைக்கு அதிக டேட்டா வழங்குவது, பயனர்களுக்கு புதிய சேவைகளை வழங்குவது என பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பயணர்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த அசுர வளர்ச்சி மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை களக்கத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க : Mobile Network : உங்கள் ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் Slow-வாக உள்ளதா?.. இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

சிம் இல்லாமல் ஃபோம் கால் பேசும் புதிய அம்சம்

பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்து வரும் நிலையில், அதனை வலுப்படுத்தும் விதமாக புதிய சேவை ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. அதாவது, சிம் கார்டு இல்லாமல் ஃபோன் கால் பேசும் சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, வியாசட் நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்என்எல் நிறுவனம் Direct – To – Device சோதனை நடத்தியது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம், Direct – To – Device தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுமார் 36,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு செயற்கை கோளை ஆய்வு செய்தது. அதன்படி இந்த சேவை, மொபைல் டவர்கள் இல்லமல் மொபைல் போன்களை நேரடியாக செயற்கைகோள் தொடர்புடன் இணைக்கிறது.

இதையும் படிங்க : Amazon : 5 நாட்கள் அலுவலகத்திற்கு வரவேண்டும்.. இல்லையென்றால்.. ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் போட்ட அமேசான்!

இதன்  மூலம் சாட்டிலைட் ஃபோன்களை போலவே, புதிய தொழில்நுட்பம் IOS மற்றும் ஆண்ட்ராய்டு செயல்பாட்டால் இயங்கும் செல்போன்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் இயங்கும். இதன் மூலம் தங்கு தடையின்றி நெட்வொர்க் சேவை கிடைக்கும். குறிப்பாக, நெட்வொர்க் இல்லாத பகுதிகள், இயற்கை பேரிடர்கள் உள்ளிட்ட நேரங்களிலும் எந்த வித பாதிப்பும் இன்றி நெட்வொர்க் சேவை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?
புரதத்தை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்?
குழந்தைகளிடம் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது எப்படி?
... இதுதான் அதுக்கு காரணம் - ஐஸ்வர்ய லட்சுமி